»   »  முதல் வார இறுதியில் ரூ 7 கோடிகளை வசூலித்த கத்தி சண்டை!

முதல் வார இறுதியில் ரூ 7 கோடிகளை வசூலித்த கத்தி சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் - தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான கத்தி சண்டை படம், முதல் மூன்று நாட்களில் ரூ 7 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ராஸ் எண்டர்டெயினர் நந்தகோபால் தயாரித்த கத்தி சண்டை டிசம்பர் 23 ரீலீஸ் ஆனது.

Kaththi Sandai collects Rs 7 cr in the opening weekend

வடிவேல் நீண்ட இடைவெளிக்கு பின் நடித்து வெளியாகும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். தமிழ் நாட்டின் 9 விநியோக பகுதியிலும் முதல் மூன்று நாட்களில் மொத்த வசூல் சுமார் 7 கோடியை வசூலித்துள்ளது.

வார நாளான திங்கட்கிழமை காலை, மேட்னி காட்சிகளுக்கு சுமார் 60- 70 சதவீத ரசிகர்கள் கத்தி சண்டையைப் பார்க்க வந்துள்ளனர். எனவே இந்த வாரம் படம் லாபத்தை எட்டிவிடும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

English summary
Kaththi Sandai has earned Rs 7 cr in the first 3 days of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil