விஜய் இல்லாமல் சென்னையில் நடக்கும் 'கத்தி' படப்பிடிப்பு

By Siva

சென்னை: கத்தி படத்தின் படப்பிடிப்பு விஜய் இல்லாமல் நடந்து வருகிறது.

விஜய் கதிர், ஜீவா என்ற இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

Kaththi shooting sans Vijay

விஜய் இல்லாமல் பிற நட்சத்திரங்கள் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய் நடிக்கும் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க 10 முதல் 15 நாட்கள் வேண்டுமாம்.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இது தான் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் ஆகும்.

கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X