twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்தி கதை விவகாரம்.... வழக்கை வாபஸ் பெற்றார் கோபி... ரூ 1000 அபராதம்

    By Shankar
    |

    கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறி வழக்குத் தொடர்ந்த மீஞ்சூர் கோபி, தன் வழக்கை திரும்பப் பெற்றார். இதனால் அவருக்கு நீதிமன்றம் ரூ 1000 அபராதம் விதித்தது.

    ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்தே சொல்லி வருபவர் கோபி. அதற்கான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அவர் வழக்கைத் தள்ளுபடி செய்தது கீழமை நீதிமன்றம்.

    Kaththi story issue: Gopi withdraws case against Murugadass

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார் கோபி. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திடீரென வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கோபியின் வழக்கறிஞர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நேரத்தை வீணடித்தார் என்று முருகதாஸ் வழக்கறிஞர் கூறியதை ஏற்று, கோபிக்கு ரூ 1000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    கோபி தன் வழக்கை வாபஸ் பெற்றதுதான் நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு பேச்சாக இருந்தது. கோபிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தவர்கள், அவரது இந்த செயலால் குழப்பமடைந்துள்ளனர்.

    இதற்கிடையில், விரைவில் இந்த விவகாரத்தை கூடுதல் ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்காகக் கொண்டுவர கோபி தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Minjur Gopi, the one who claimed the rights of Kaththi story has withdrew his case against AR Murugadass.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X