எதிர்ப்பார்ப்பு, எதிர்ப்புக்கிடையில் விரைவில் வெளியாகிறது கத்தி ட்ரைலர்!
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு, தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் வெளியாகிறது லைகா நிறுவனம் தயாரித்துள்ள விஜய்யின் கத்தி ட்ரைலர்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்துள்ள கத்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படம் தீபாவளிக்கு வெளியாகத் தயாராக உள்ளது.
ராஜபக்சேவின் பினாமி தயாரித்த படம் என்று கூறி இந்தப் படத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்புகளைச் சமாளிக்க பல்வேறு விளக்கங்களை லைகா தரப்பு கூறியது.
பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் சமீபத்தில்தான் படத்தின் இசை வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது பாடல்களுக்கு.
அடுத்து படத்தின் ட்ரைலர் தயாராகி வருகிறது. இன்னும் சில தினங்களில் கத்தி ட்ரைலர் வெளியாகிறது. படத்தின் முதல் பிரதி அக்டோபர் 12-ம் தேதி தயாராகிவிடும் என்றும், 15-ம் தேதியே படத்தை சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












