விஜய் 'சூப்பர் ஸ்டாரா'?.. பார்த்தா அப்படி தெரியலையே!... 'கத்தி' வில்லனின் கலகல பேச்சு!!!
சென்னை: விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தன்னால் நம்பவே முடியவில்லை என கத்தி பட வில்லன் நீல் நிதின் முகேஷ் தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இந்தி படங்களில் ஹீரோ உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நீல் நிதின்.
இந்நிலையில் அவர் விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.

விஜய்
திரை உலகில் உள்ள அருமையான மனிதர்களில் ஒருவர் விஜய் என்று நிதின் நெகிழ்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்
விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஏன் ஏன்றால் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் போன்றே நடந்து கொள்ள மாட்டார். அவ்வளவு அடக்கமாக நடந்து கொள்கிறார் என்றார் நிதின்.

ஊக்குவிப்பு
படப்பிடிப்பில் விஜய் மிகவும் நட்புடன் பழகுகிறார். மேலும் ஆதரவாக இருப்பதுடன் ஊக்குவிக்கிறார் என்று விஜய் புகழ்பாடுகிறார் நிதின்.

லக்கி
என் முதல் தமிழ் படத்திலேயே நான் விஜய் மற்றும் முருகதாஸுடன் பணியாற்ற நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தெரிவித்துள்ளார் நிதின்.


Click it and Unblock the Notifications











