'கத்தி' லைகா தயாரிப்பாக தான் ரிலீ்ஸ் ஆகும்: சுபாஷ்கரண் திட்டவட்டம்
சென்னை: கத்தி படம் லைகா தயாரிப்பாகத் தான் ரிலீஸாகும். அதில் மாற்றம் இல்லை என்று தயாரிப்பாளர் சுபாஷ்கரண் தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரண் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று செய்திகள் வெளியாகின.
இதனால் கத்தி படத்திற்கு சில தமிழ் அமைப்புகளும், மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீர்மானம்
முருகதாஸையோ, விஜய்யையோ எதிர்க்கவில்லை இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் ஆதரவாளரான சுபாஷ்கரண் கத்தி படத்தை தயாரிப்பதை தான் எதிர்க்கிறோம். அதனால் படத்தின் தயாரிப்பாளர் மாறினால் எதிர்க்க மாட்டோம் என்று தமிழ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றின.

கை மாறுகிறது
தயாரிப்பாளரால் தான் படத்திற்கு பிரச்சனை என்பதால் படத்தின் தயாரிப்பாளரை மாற்ற முருகதாஸும், விஜய்யும் திட்டமிட்டதாக கூறப்பட்டது. கத்தியை ஐங்கரன் இன்டர்நேஷனலுடன் சேர்ந்து தான் லைகா தயாரிக்கிறது.

சுபாஷ்கரண்
கத்தி லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாக தான் ரிலீஸாகும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சுபாஷ்கரண் அறிவித்துள்ளார். இதை விஜய் ட்வீட் செய்துள்ளார்.

இசை வெளியீடு
கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் வியாழக்கிழமை மாலை நிச்சயம் நடைபெறும். காத்திருங்கள் என்று விஜய் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











