விஷாலின் 'கத்தி சண்டை' தேறுமா?: ட்விட்டர் விமர்சனம்
சென்னை: விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள கத்தி சண்டை படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, சூரி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள கத்தி சண்டை படம் இன்று ரிலீஸானது. இதன் தெலுங்கு பதிப்பும் இன்று வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
காமெடி
கத்தி சண்டை முதல் பாதி: மீண்டும் சுராஜின் பார்முலா லாஜிக் இல்லாமல் போனது. ஆனால் காமெடி கை கொடுத்துள்ளது, இடைவேளையில் டுவிஸ்டுக்குள் டுவிஸ்ட், இது வரை ஓகே.
செம
கத்தி சண்டை அண்ணா கலக்கிட்டீங்கணா செம்ம நடிப்பு@sooriofficial என்ன ஒரு நடிகர், சூரி, விஷால் கூட்டணி அருமை
ஓவர் சீன்
கத்தி சண்டை விமர்சனங்கள் எதிர்பார்த்தது தான்... ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது
வடிவேலு
ஓமைகாட்!! கத்தி சண்டை படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்துள்ளன. டியர் சுராஜ் வடிவேலு சாரின் திறமையை வீணடித்ததற்கு உங்களை மன்னிக்க மாட்டோம்.
ஆக்ஷன்
#Kaththisandai: நல்ல ஆக்ஷன் படம். நல்ல மெசேஜுடன் டுவிஸ்டுகள், காமெடி மற்றும் எமோஷன்ஸ்


Click it and Unblock the Notifications











