காத்துவாக்குல ரெண்டு காதல் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா!

சென்னை : நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் விஜய்சேதுபதி நயன்தாரா இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் காதல் கலந்த காமெடி ஜானரில் படங்களை இயக்குவதில் வல்லவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளார்

முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்க டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

இயக்கிய ஒரு சில திரைப்படங்களிலேயே இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான் என்ற பிளாக்பஸ்டர் மூவியை கொடுக்க இவர் தமிழ் சினிமாவில் அனைவரும் கவனிக்கக் கூடிய மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். நானும் ரவுடிதான் மூலம் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்த விக்னேஷ் சிவன் இப்பொழுது மீண்டும் இந்த கூட்டணி அமைகிறது.

முக்கோண காதலாக இருக்குமோ

முக்கோண காதலாக இருக்குமோ

கடைசியாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் என்ற வெற்றி படத்தை கொடுத்த விக்னேஷ் சிவன் இப்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். அனைவருக்கும் ஃபேவரிட் கூட்டணியான விக்னேஷ் சிவன் விஜய்சேதுபதி நயன்தாரா ஆகியோர் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து இருக்க புதிதாக சமந்தாவும் இணைந்துள்ளார். விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா என மூன்று பேர் இதில் நடிப்பதால் முக்கோண காதலாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

விஜய் சேதுபதி டப்பிங் பணிகளை

விஜய் சேதுபதி டப்பிங் பணிகளை

கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா சூழல் காரணமாக தாமதப்படுத்த பட்டு பின் மீண்டும் தொடங்கியது. இன்னும் ஓரிரு வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடியும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் பணிகளை சமீபத்தில் தொடங்கினார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

டிஜிட்டல் உரிமை

டிஜிட்டல் உரிமை

கொரோனா சூழல் காரணமாக காத்துவாக்குல ரெண்டு காதல் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்பட்டது. பின்னர் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த முக்கிய தகவல் தற்போது கசிந்துள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான ஹாட்ஸ்டார் இந்த படத்தை சுமார் 21 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமையை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X