காத்துவாக்குல ரெண்டு காதல் அடுத்த சிங்கிளுக்கு ரெடியா...? முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சென்னை: நானும் ரவுடிதான் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்

நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்

ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூழலில் அடுத்த சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக மாற்றுத்திறனாளி

முதல் முறையாக மாற்றுத்திறனாளி

காதல் திரைப்படங்களை தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு பிடிக்கின்றவாறு இயக்கிவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக மாறியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் நடிகை நயன்தாரா முதல் முறையாக மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். காதல், காமெடி என நானும் ரவுடிதான் படம் பட்டையைக் கிளப்பியது.

டைட்டிலுக்கு ஏற்றது போலவே

டைட்டிலுக்கு ஏற்றது போலவே

இந்த நிலையில் நானும் ரவுடி தான் கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடத்திவரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலுக்கு ஏற்றது போலவே இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இணைந்து நடிக்க இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது மேலும் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

முக்கோணக் காதலை

முக்கோணக் காதலை

கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது அதன்படி கோயம்புத்தூரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக விக்னேஷ் சிவன் திரைப்படங்கள் என்றாலே அதில் காதலுடன் காமெடியும் அனைவரும் ரசிக்கின்ற வகையில் இடம் பெற்றிருக்கும் அந்த வகையில் இந்த படம் முக்கோணக் காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Divorce-கு பின் என்னை காப்பாற்றியவர்? | மனஅழுத்ததில் இருந்து மீண்டு வந்த நான்! Samantha Clarfies
அடுத்த சிங்கிள்

அடுத்த சிங்கிள்

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்திற்கு வழக்கம்போல அனிருத் இசை அமைக்கிறார். அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அதிலும் குறிப்பாக டு டு டு பாடல் இணையதளத்தில் சக்கை போடு போட்டது. இந்த நிலையில் அடுத்த பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத்தின் 10 ஆண்டுகால திரைவாழ்க்கையில் 25வது திரைப்படமாக உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த சிங்கிள் மிக விரைவிலேயே வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X