இரண்டு வருஷத்துக்கு எழுந்து நடக்க முடியாது.. வினையான விளையாட்டு.. தவிக்கும் பிக் பிரதர் பிரபலம்!

இங்கிலாந்து: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெல்லாம் முன்னோடியான பிக் பிரதர் நிகழ்ச்சியின் 15வது சீசன் டைட்டில் வின்னரான (Katie Price) கேட்டி பிரைஸுக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சூப்பர் மாடலாக ஜொலிக்கும் கேட்டி பிரைஸ் சமீபத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.

லேசான காயமாக இருக்கும் என்று நினைத்த அவருக்கு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் எழுந்தே நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

நம்ம ஊரில் பிரபலமாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடிக்கல் நாட்டியதே பிக் பிரதர் நிகழ்ச்சி தான். கடந்த 2015ம் ஆண்டு ஒளிபரப்பான 15வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல மாடல் அழகி கேட்டி பிரைஸ் அந்த ஆண்டிற்கான பிக் பிரதர் டைட்டிலை தட்டிச் சென்றார். மேலும், Get Me Our OF Here, I'm Celebrity உள்ளிட்ட ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர்.

பிளேபாய் மாடல்

பிளேபாய் மாடல்

டெய்லி ஸ்டார், எஃப்.எச்.எம், பிளேபாய், மேக்ஸிம், நட்ஸ், வோக், எஸ்குயர் என உலகில் உள்ள அனைத்து பிரபல ஃபேஷன் இதழ்களிலும் இவரது அட்டைப் படம் இடம்பெறாமல் இல்லை. அந்த அளவுக்கு சர்வதேச மாடல் அழகியாக கலக்கியவர் இவர். மேலும், அழகு சாதன தொழிலதிபராகவும், பாடகியாகவும் திகழ்கிறார்.

3 கணவன் 5 குழந்தைகள்

3 கணவன் 5 குழந்தைகள்

2005ம் ஆண்டு பீட்டர் ஆண்ட்ரூவை திருமணம் செய்து கொண்ட கேட்டி பிரைஸ், 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் அலெக்ஸ் ரெய்ட் என்பவரை திருமணம் செய்த இவர், ஒரே ஆண்டுக்குள் அவரையும் விவாகரத்து செய்து கொண்டார். அதன் பின்னர் 2013ம் ஆண்டு கிரண் ஹெய்லர் என்பவரை மணந்து கொண்ட கேட்டி பிரைஸ் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள்.

வினையான விளையாட்டு

வினையான விளையாட்டு

சமீபத்தில் தனது குடும்பத்துடன் துருக்கி நாட்டில் சுற்றுலா சென்ற போது, விளையாட்டுத் தனமாக சுவர் ஒன்றின் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, தவறுதலாக விழுந்ததால், அவருக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், தற்போது கால் கட்டுடன் இருக்கும் அவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

2 ஆண்டுகளுக்கு எழுந்து நடக்க முடியாது

2 ஆண்டுகளுக்கு எழுந்து நடக்க முடியாது

முதலில் சின்ன முறிவாக இருக்கும் என்றே கேட்டி பிரைஸ் நினைத்துள்ளார். ஒரு மூன்று அல்லது ஆறு மாதத்தில் நடக்கலாம் என்று நினைத்து இருந்த அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில், இது சாதாரண முறிவு அல்ல, மிகவும் பயங்கரமாக அடிபட்டு இருக்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு உங்களால் எழுந்து நடக்க முடியாது எனக் கூறியுள்ளனர். அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X