Vidamuyarchi: அடேங்கப்பா.. 3 பாலிவுட் நடிகைகளா? விடாமுயற்சியில் அஜித்துக்கு ஜோடியாகப் போவது யாரு?

சென்னை: நடிகர் அஜித்தின் 62வது படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்றும் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால், படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தான் தொடங்கும் என்றும் ஹீரோயின், வில்லன் உள்ளிட்ட நடிகர்களை தேர்வு செய்யும் பணிகளில் இயக்குநர் மகிழ் திருமேனி தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Katirna Kaif, Kareena Kapoor and Kangana Ranaut are in talks for Ajiths Vidamuyarchi

ஐஸ்வர்யா ராய் இல்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் பெயர்கள் இடம்பெற்றன.

நடிகை நயன்தாராவின் பெயரும் அடிபட்டது. ஆனால், கடைசியில் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அந்த பழைய லிஸ்ட்டை முற்றிலுமாக மாற்றி விட்டு ஃபிரெஷ்ஷான லிஸ்ட் வந்துள்ளது.

தமிழில் தலைப்பு: நடிகர் அஜித் குமார் தொடர்ந்து வலிமை, துணிவு, விடாமுயற்சி என தமிழில் படத்தலைப்புகளை வைத்து வருகிறார். அதற்காக பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் ஜெயிலர், விஜய் பீஸ்ட், லியோ என ஆங்கில டைட்டில்களை தங்கள் படங்களுக்கு வைத்து வருவது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Katirna Kaif, Kareena Kapoor and Kangana Ranaut are in talks for Ajiths Vidamuyarchi

இந்தி ஹீரோயின்கள்: அதே சமயம் தமிழில் தலைப்பு வைக்கும் நடிகர் அஜித் பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக அதிகபட்சமாக இந்தி ஹீரோயின்களையே தனது படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வருகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலனும், வலிமை படத்தில் ஹூமா குரேஷியும் நடித்திருந்தனர். துணிவு படத்தில் மலையாள நடிகை மஞ்சு வரியர் நடித்திருந்தார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடிக்க மீண்டும் 3 பாலிவுட் ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

3 ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை: விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையிலும், இன்னமும் அந்த படத்தின் ஹீரோயின் முடிவாகவில்லை என்கின்றனர்.

Katirna Kaif, Kareena Kapoor and Kangana Ranaut are in talks for Ajiths Vidamuyarchi

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான கத்ரீனா கைஃப், கரீனா கபூர் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஷூட்டிங் செல்வதற்கு முன்னதாக இந்த மாத இறுதிக்குள் ஹீரோயினை இயக்குநர் மகிழ் திருமேனி ஃபைனல் செய்து விடுவார் என்கின்றனர்.

நடிகை கங்கனா ரனாவத் தமிழில் தலைவி, சந்திரமுகி 2 என தொடர்ந்து நடித்து வரும் நிலையில், அதிகபட்சமாக கங்கனா ரனாவத் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த கத்ரீனா கைஃப் கூட இந்த ரேஸில் உள்ளார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X