பிரியங்கா இல்லன்னா… கத்ரீனா அவ்ளோதான்!

மும்பை: மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் சல்மான் கானின் பாரத் திரைப்படத்திற்கு கதாநாயகியாக பிரியங்கா சோப்ராவுக்கு பதிலாக கத்ரீனா கைஃப் ஒப்பந்தமாகியுள்ளார்.

மல்யுத்தத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு சல்மான்கான் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் சுல்தான். இத்திரைப்படத்தை இயக்கிய அலி அபாஸ் ஜாபர் சல்மான் கானை வைத்து இயக்கும் படம் பாரத்.

Katrina is Salman Khans heorine in Bharat!

சுல்தான் திரைப்பட வெற்றிக்குப் பிறகு சல்மான் அலி அபாஸ் ஜாபர் இயக்கத்தில் கத்ரீனா கைஃப்புடன் நடித்த டைகர் ஜிந்தா ஹை திரைப்படமும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து இப்போது பாரத் படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

"ஓட் டு மை ஃபாதர்" என்ற கொரிய திரைப்படத்தின் ரிமேக் தான் இந்த பாரத். இப்படத்திற்கு டெல்லி, பஞ்சாப், அபுதாபி மற்றும் ஸ்பெயின் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டம்மிட்டுள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. ஆனால் பிரியங்கா சோப்ரா சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

படத்திலிருந்து பிரியங்கா விலகியதால் சல்மான் வருத்தத்துடன் இருப்பதாகவும், இனிமேல் எந்த படத்திலும் சல்மான் பிரியங்காவுடன் சேர்ந்து நடிக்கமாட்டார் எனவும் செய்திகள் பரவின.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படியெல்லாம் எதும் இல்லை. சல்மான் வழக்கம்போலதான் உள்ளார் என சல்மானின் தந்தை சலீம்கான் பதிலளித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் இடத்தை நிறப்ப சரியான ஆள் கத்ரீனா கைஃப் தான் என முடிவு செய்து படக்குழுவினர் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்திலிருந்து கத்ரீனா படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

இப்படத்தில் தபு, திஷாபதானி, சுனில் குரோவர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாரத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X