களைக்கட்டும் கல்யாணம்.. கத்ரினா கைஃப் - விக்கி கவுஷல் திருமணத்தில் என்னென்ன மெனு பாத்தீங்களா!
மும்பை: கத்ரினா கைஃப் - விக்கி கவுஷல் திருமணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கத்ரினா கைஃப். நடிகையாக மட்டுமின்றி மாடலகாவும் உள்ள கத்ரீனா கைஃப் ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் கத்ரினா கைஃப். ஹாங்காங்கில் பிறந்த கத்ரினா கைஃப்புக்கு 5 சகோதரிகள் உள்ளனர்.

தந்தை காஷ்மீர்
அவருடைய தாயார் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஆவார், தந்தை காஷ்மீரை சேர்ந்தவர். இதனால் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள கத்ரினா கைஃப் 'பூம்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார். நடிகை கத்ரினா கைஃப் அடிக்கடி காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார்.

அடிக்கடி காதல் சர்ச்சைகள்
சல்மான் கானுடன் டேட்டிங்கில் இருந்தார் கத்ரினா. பின்னர் அவர்களின் ரிலேஷன்ஷிப் சில காரணங்களால் முறிந்தது. இதனை தொடர்ந்து பிரபல நடிகரான ரன்பீர் கபூருடன் கத்ரினா கைஃப் நெருக்கமாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகை கத்ரினா கைஃப் தன்னை விட 5 வயது சிறியவரான நடிகர் விக்கி கவுஷலுடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் பரவியது.

கோட்டையில் திருமணம்
தங்களின் காதல் குறித்து இருவருமே மவுனம் காத்து வந்த நிலையில், அவர்களின் காதல் வளர்ந்து திருமணத்தில் வந்து நிற்கிறது. கடந்த ஒரு மாதமாகவே அவர்களின் திருமணம் குறித்த பேச்சு பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தது. இந்நிலையில் இருவருக்கும் வரும் 9 ஆம் தேதியான நாளை ராஜஸ்தானில் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது.

மூன்று நாட்கள் திருமணம்
இத்திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைப் தனது காதலர் விக்கி கவுஷலுடன் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று தொடங்கிய வரும் 9 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த திருமண வைபவம் நடைபெறுகிறது.

கோட்டையை சுற்றி பாதுகாப்பு
இந்த திருமணத்திற்கு வெறும் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூரில் உள்ள கோட்டையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்போனில் படம் பிடிக்க வேண்டாம்
கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் திருமணத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழிலேயே திருமண வைபங்களை செல்போனில் படம் பிடித்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

மேற்கத்திய உணவுகளுக்கு ஏற்பாடு
இந்நிலையில் கத்ரினா - விக்கி திருமணத்தில் பரிமாறப்படும் உணவு மெனு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் மற்றும் இந்திய விருந்தினர்களை மனதில் வைத்து விக்கி மற்றும் கத்ரீனா தனிப்பட்ட முறையில் மெனுவைச் சேர்த்துள்ளனர்.

ஐந்து அடுக்கு கேக்
தம்பதியரின் திருமணத்தின் உணவு மெனுவில் நேரடி கச்சோரி மற்றும் சாட் ஸ்டால்கள், கபாப்கள் மற்றும் பாரம்பரிய ராஜஸ்தானி உணவுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இத்தாலிய சமையல்காரரால் உருவாக்கப்பட்ட ஐந்து அடுக்கு திருமண கேக்கும் இந்த திருமண மெனுவில் அடங்கும்.

ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு
விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் திருமண மெனுவில் உள்ளவை,
கச்சோரிஸ், தஹி பல்லா மற்றும் ஃப்யூஷன் சாட் ஆகியவற்றிற்கான நேரடி ஸ்டால். கபாப் மற்றும் ஃபிஷ் ப்ளாட்டர் உள்ளிட்ட வட இந்திய உணவு வகைகள். பாரம்பரிய ராஜஸ்தானி உணவு வகைகளான தால் பாத்தி சுர்மா போன்ற பல்வேறு பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் சுமார் 15 வகையான பருப்பு வகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தனி உணவுகளுக்கு தனி ஸ்டால்
மேலும் இத்தாலியைச் சேர்ந்த சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட நீலம் மற்றும் வெள்ளை நிற ஐந்து அடுக்கு டிஃப்பனி திருமண கேக்
பான் மற்றும் கோல்கப்பாஸ் மற்றும் பிற இந்திய உணவு வகைகளுக்கு தனி ஸ்டால்.. என அசத்தலான மெனுக்கள், ஸ்டால்களுடன் களைக்கட்டியுள்ளது கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கவுஷலின் திருமணம்.


Click it and Unblock the Notifications











