கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்!

கேத்ரீனா கைஃபின் அழகுசாதன நிறுவனமான கே பியூட்டி புரமோஷனில் கலந்து கொண்ட நயன்தாராவை ‘Gorgeous South Superstar’ என பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் புகழ்ந்துள்ள இன்ஸ்டா வீடியோ க்ளிப் வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara to campaign for Katrina Kaif's beauty line!

மும்பை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃபின் அழகுசாதன நிறுவனமான 'கே பியூட்டி' விளம்பர புரமோஷனில் கலந்து கொண்ட நயன்தாராவை 'Gorgeous South Superstar' என கேத்ரீனா கைஃப் புகழ்ந்துள்ள இன்ஸ்டா வீடியோ க்ளிப் வைரலாகி வருகிறது.

இந்த விளம்பரத்தில் கேத்ரினா கைஃப், நயன்தாராவுடன் பல முன்னணி நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

மூன்றாவது முறை

மூன்றாவது முறை

நடிகர் விஜய்யின் சிவகாசி படத்தில் வரும் "கோடம்பாக்கம் ஏரியா" பாடலுக்கு நடனமாடிய நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அட்லி இயக்கத்தில் பிகில் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய்யுடன் நடிக்கிறார் நயன்தாரா.

விளம்பர தொடர்பு

பாலிவுட் நாயகி கேத்ரினா கைஃப் மற்றும் நயன்தாரா என இருவருமே நடிகர் விஜய்யுடன் நடித்துள்ளனர். பழைய கோக் விளம்பரத்தில் நடிகர் விஜய்யுடன் கேத்ரினா கைஃப் உடன் நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் குறித்த கேள்விக்கு, அவர் சிறந்த டான்ஸர் என்றும் அவருடன் நடிக்க ஆசை என்றும் கேத்ரினா தெரிவித்திருந்தார்.

கேத்ரினா புகழாரம்

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை நயன்தாராவுடன் விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக பணிபுரிந்த கேத்ரினா கைஃப், நயன்தாராவை தென்னிந்தியாவின் அழகான சூப்பர்ஸ்டார் நடிகை என புகழ்ந்துள்ளார். அந்த வீடியோ க்ளிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

அழகு தேவதை

அழகு தேவதை

கேத்ரினா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த விளம்பர வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நயன்தாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார். கேத்ரினா கைஃப், நயன்தாராவுடன் கல்கி கோச்சலின், சாய்னா நேவால், ஊர்வசி ரவுட்டலா, அபூர்வா என பல நடிகைகள் அணிவகுத்துள்ளனர்.

பாலிவுட் பயணம்

பாலிவுட் பயணம்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என கலக்கி வரும் நடிகை நயன்தாரா, அடுத்து தனது பார்வையை பாலிவுட் பக்கம் திருப்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஒத்திகையாகத் தான், பாலிவுட் விளம்பரங்களில் நயன்தாரா கால்பதிக்க காரணம் என்றும், விரைவில் ஒரு பெரிய பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X