வாரிசு வந்தாச்சு.. உற்சாகத்தில் கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல்.. அடடே இவங்க கொண்டாட்டம் நல்லா இருக்கே!
மும்பை: பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடியான விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் பெற்றோர் ஆகப்போகும் தகவலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் தங்கள் முதல் குழந்தையை விரைவில் வரவேற்க தயாராகி வருவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் தந்தையாகப் போகும் விக்கி கௌஷல், தன் மனைவி கத்ரீனாவின் பிரசவ தேதி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துறை வட்டாரங்களில் உலாவரும் தகவல்களின்படி, விக்கி மற்றும் கத்ரீனா எந்த நேரத்திலும் தங்கள் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2021 டிசம்பர் 9 அன்று ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர். கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக வரும் செய்திகள் பாலிவுட்டில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம், இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது ரசிகர்கள் தொடங்கி, ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்கள்.

இன்ப அதிர்ச்சியில் பாலிவுட்: கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் ஒரு கருப்பு வெள்ளை போலராய்டு புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் விக்கி கத்ரீனாவின் கர்ப்பமான வயிற்றை அணைத்தவாறு நின்று கொண்டு இருக்கிறார். "இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் எங்கள் வாழ்க்கையின் சிறந்த அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர்கள் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் இட்டிருந்தார்கள். இவர்களின் இந்த பதிவுக்கு தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கிருதி சனோன், அக்ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா, கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள், விரைவில் பெற்றோராகப் போகும் இந்த ஜோடிக்கு தங்கள் அன்பையும் ஆசீர்வாதங்களையும் பொழிந்தனர்.
எதிர்பார்ப்பு: கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் அக்டோபர் 15 முதல் 30-க்குள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்பார்கள் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. ரசிகர்கள் தங்கள் குழந்தையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், விக்கி தங்கள் குழந்தை "ஏறக்குறைய பூமிக்கு வந்துவிட்டது" என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கௌஷலின் சந்தோஷம்: அதாவது, சமீபத்தில் யுவாவுடன் நடந்த உரையாடலில், விக்கி தந்தையாகப் போவது குறித்து எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் பேசுகையில் "நான் ஒரு தந்தையாகப் போவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இது ஒரு பெரிய ஆசீர்வாதம் மற்றும் உற்சாகமான காலம். கிட்டத்தட்ட எனது குழந்தை பூமிக்கு வந்துவிட்டது, அதனால் ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் வீட்டிலிருந்து வெளியேற மாட்டேன் என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் அவரது சந்தோஷத்தைப் பார்த்தும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











