மெக்ஸிகோ பீச்சில் நீச்சல் உடையில் கத்ரீனா கைஃப் ஜாலி
மும்பை: பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக கொடிகட்டி பறக்குற நம்ம கத்ரீனா கைஃப், சூர்யவன்ஷி படத்தை முடிச்ச கையோட மெக்ஸிகோவுக்கு பறந்து போயி பிறந்தநாள் கொண்டாடியிருக்காங்க. அங்க இருக்குற பீச்சுல நீச்சல் ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு விளையாடுற ஃபோட்டோக்கள் இப்போ சோசியல் மீடியாவுல பரபரப்ப பத்த வைச்சிருக்கு.
36 வயசான முன்னணி கவர்ச்சி கதாநாயகியான கத்ரீனா கைஃப். கோடிகள்ல கொடி கட்டி பறக்குற இவர் முன்னணி ஹீரோவான அக்ஷய் குமாரோட ஜோடியா சூர்யவன்ஷி படத்துல ரொம்ப பிஸியா நடிச்சிட்டு இருந்தார். இந்தப் பட சூட்டிங் போன ஜூன் மாசம் முடிஞ்சிடிச்சி. சூட்டிங்கை முடிஞ்ச கையோட அந்த டென்சன்ல இருந்து தப்பிக்கிறதுக்கு உடனடியா தன் குடும்பத்தோட மெக்ஸிகோவுக்கு பறந்துட்டாங்க கத்ரீனா.
தன்னோட 36ஆவது பிறந்த நாள மெக்ஸிகோவில செம ஜாலியா அனுபவிச்சிட்டு இருக்காங்க கத்ரீனா கைஃப். அந்த சந்தோஷம் அவரோட மொகத்துலயே நல்லா தெரியுது. அங்க இருக்குற ஒரு பீச்ல நீல கலர் நீச்சல் ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு கடல்ல குளிச்சி குதிச்சி என்ஜாய் பண்றது மாதிரியான ஃபோட்டோக்கள் சோசியல் மீடியாவுல வெளிவந்து ரொம்ப பரபரப்பா போய்கிட்டு இருக்கு.

நீச்சல் டிரஸ்
பீச்சுல குளிக்கிறதுல அப்படி என்ன விசேசம்னு கேக்குறீங்களா. நல்லா கண்ண முழிச்சி அவர் போட்டுகிட்டு இருக்குற நீச்சல் ட்ரெஸ மட்டும் பாருங்க. அதுல என்ன எழுதியிருக்குன்னா, தினமும் பாத்துகிட்டு இரு (Daily Look) அப்பிடின்னு எழுதியிருக்கு.

ரசிகர்கள் ரசனை
அத ஃபோட்டோ எடுத்து கையோட லாஸ்ட் ஒன் நவ் பேக் டு ஒர்க் (Last One Now back to work) அப்பிடின்னு எழுதி ஃபேஸ்புக்லயும் போட்டுருக்காரு. இதப் பாத்த அவரோட ரசிகர்கள் அப்பிடியே தன்ன மறந்து மெய் சிலித்து போய் ரசிச்சிக்கிட்டு இருக்காங்க.

கும்மாளம் போட்ட கத்ரீனா
சின்ன புள்ளே மாதிரியே அந்த பீச்சுல ஓடியாடி குதிச்சி கும்மாளம் போடுற அந்த ஃபோட்டோவ பாக்கும் போது அவங்க ரசிர்கள் எல்லாம் அப்பிடியே அந்த ஃபோட்டோவ கண்ணுல ஒத்திகிடறாங்கன்னா பாத்துக்கோங்க.

சூர்யவன்சி
கத்ரீனா அடுத்து நடிச்சி வெளிவரப்போற படம் அக்ஷய் குமார் கூட ஜோடியா நடிச்ச சூர்யவன்ஷி படம் தான். இதுல சூர்யவம்ஷியா நடிச்சிருக்கிறது அக்ஷய் குமார் தான். இந்தப் படம் வர்ற 2020 ஆவது வருஷம் மார்ச் 27 ல் ரிலீஸ் ஆகுறதா பேசிக்கறாங்க. அதோட இந்தப்படம் நிச்சயமா மாபெரும் வெற்றிப்படமா அமையும்னு படக்குழுவினர் பேசிக்கறாங்க.


Click it and Unblock the Notifications











