நீங்க கத்ரினா ஃகைப்பா? அப்படியே இருக்கீங்க.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் இன்ஸ்டா பிரபலம்!

Recommended Video

கத்ரினா ஃகைப்பா? அப்படியே இருக்கீங்க.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் பிரபலம் வீடியோ

டெல்லி: பாலிவுட் நடிகை கத்ரினா ஃகைப் போலவே இருக்கும் இன்ஸ்டா மற்றும் டிக்டாக் பிரபலம் ஒருவர் இணையம் முழுக்க வைரலாகி வருகிறார்.

உலகம் முழுக்க ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு ஸ்டண்ட் டபுள் இருப்பார்கள். பிரபலங்கள் போலவே அச்சு அசலாக இருக்கும் இவர்கள் படங்களில் ரிஸ்க்கான ஷாட்களை எடுக்கும் போது அந்த நடிகர்களுக்கு பதிலாக நடிப்பார்கள்.

நடிகர் அஜித், விஜய், சூர்யாவிற்கு எல்லாம் கூட இப்படி ஸ்டண்ட் டபுள் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பாலிவுட் நடிகை கத்ரினா ஃகைப் போலவே இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

எப்படி அவர்

எப்படி அவர்

பேஷன் டிசைனர் அலினா ராயின் இன்ஸ்டாகிராம் பக்கம் இணையம் முழுக்க பிரபலம். முதலில் தன்னுடைய பேஷன் டிசைன் உடைகள் மூலம் இவர் பிரபலமாக இருந்தார். அதன்பின் சில வருடங்களுக்கு முன் இவர் தன்னுடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்.

வைரல் ஆனார்

இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக்காகி, ஸ்டன் ஆனார்கள். காரணம் இவர் பார்க்க அச்சு அசலாக கத்ரினா ஃகைப் போலவே இருந்தார். வரிசையாக இவர் வெளியிட்ட புகைப்படங்களில் எல்லாம் கத்ரினா ஃகைப் போலவே இருந்தார்.

ஷாக் ஆனார்கள்

அந்த நொடியே இவர் இணையம் முழுக்க பிரபலம் ஆனார். அதன்பின் டிக் டாக் செயலியில் இவர் வரிசையாக வீடியோக்களை வெளியிட தொடங்கினார். விளைவு இப்போது டிக் டாக்கிலும் அம்மணி படு பிரபலம். டிக் டாக்கில் இவருக்கு மொத்தம் 33.5k பின் தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

கேள்வி கேட்கிறார்கள்

கேள்வி கேட்கிறார்கள்

நீங்க கத்ரினா ஃகைப்பா? பார்க்க அப்படியே இருக்கீங்க என்று பலர் இவரிடம் கேட்டு உள்ளனர். இவரின் கமெண்ட் பாக்ஸ் முழுக்க கத்ரினா ஃகைப் குறித்த கேள்விகளால் நிரம்பி வழிகிறது. கத்ரினா ஃகைப் உங்களுக்கு சொந்தமா என்றும் கூட சிலர் கேட்டுள்ளனர்.

நண்பர்கள்

2017ல் இருந்து இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவரின் இந்த புகழ் காரணமாக தற்போது பாலிவுட்டிலும் இவர் நிறைய நண்பர்களை சம்பாதித்துள்ளார். இதனால் விரைவில் அலினா ராயை கத்ரினா சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X