சல்மான் கான் காதலி எதற்கு ரஜினி வில்லனை ரகசியமாக சந்திக்கணும்?
மும்பை: கத்ரீனா கைஃப் அக்ஷய் குமாரை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளாராம்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது பழைய காதலரான சல்மான் கானிடமே திரும்பி வந்துவிட்டார். கத்ரீனா வந்த பிறகு சல்மான் லூலியா வந்தூரை பிரிந்துவிட்டாராம்.
சல்மான் எப்பொழுதுமே கத்ரீனாவுடன் இருக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.

அக்ஷய்
ஆதித்யா சோப்ராவை பார்க்க ஒய்.ஆர்.எப். ஸ்டுடியோஸுக்கு சென்றார் கத்ரீனா. அதன் பிறகு அக்ஷய் குமாரை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார் கத்ரீனா.

அரை மணிநேரம்
கத்ரீனா அக்ஷய் குமாரை சந்தித்து அரை மணிநேரம் பேசிவிட்டு சென்றுள்ளார். அந்த இடத்தில் புகைப்படக் கலைஞர்கள் இருந்தும் அவர் யார் கண்ணிலும் படவில்லை.

ஹீரோயின்
அக்ஷய் குமாரை வைத்து கரண் ஜோஹார் தயாரிக்கும் படம் கேசரி. இந்த படத்தில் அக்ஷயின் மனைவியாக நடிக்க பரினீத்தி சோப்ராவிடம் சேப்பட்டது. ஆனால் அவர் பிசியாக இருப்பதால் நடிக்க முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

சந்திப்பு
கேசரி படத்தில் பரினீத்தி சோப்ரா நடிப்பது சந்தேகமாக உள்ள நிலையில் கத்ரீனா அக்கியை சந்தித்து பேசியுள்ளார். அந்த வாய்ப்பை தனக்கு கொடுக்குமாறு அவர் கேட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











