»   »  காதலை புதுப்பிக்கலாமா?: கெஞ்சிய கத்ரீனா, 'ஓவர்' என வெடுக்கென கூறிய நடிகர் ரன்பிர்

காதலை புதுப்பிக்கலாமா?: கெஞ்சிய கத்ரீனா, 'ஓவர்' என வெடுக்கென கூறிய நடிகர் ரன்பிர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பார்ட்டி ஒன்றில் நடிகர் ரன்பிர் கபூரை பார்த்த நடிகை கத்ரீனா கைப் பழையதை எல்லாம் மறந்து காதலை புதுப்பிக்கலாம் என்று கெஞ்சி கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைபும் காதலித்து வந்தனர். மும்பையில் வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ரன்பிர் தனது முன்னாள் காதலியான தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடிக்கையில் அவர்கள் நெருக்கமாக ஆனது கத்ரீனாவுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் ரன்பிரும், கத்ரீனாவும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து ரன்பிர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

கத்ரீனா

கத்ரீனா

ரன்பிரையும், கத்ரீனாவையும் சேர்த்து வைக்க அவரது தாய் முயற்சி செய்தார். கத்ரீனாவின் தாய் ரன்பிரின் அம்மாவை அணுகி பிள்ளைகளை ஒன்று சேர்த்து வைப்பது குறித்து பேசினார். ஆனால் ரன்பிரின் அம்மாவோ முடிந்தது முடிந்தது தான் என்று கறாராக தெரிவித்துவிட்டார்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

காதல் முறிவுக்கு பிறகு ரன்பிரின் குடும்ப வாஸ்ட்ஆப் குருப்பில் இருந்து கத்ரீனாவை நீக்கிவிட்டனர். ஏற்கனவே ரன்பிரின் அம்மாவுக்கு கத்ரீனாவை பிடிக்கவில்லை என்று பேச்சாக கிடந்தது. அவருக்கு தீபிகாவையும் பிடிக்காது.

பார்ட்டி

பார்ட்டி

பிரிந்த பிறகு ரன்பிரும், கத்ரீனாவும் முதல்முறையாக ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் சந்தித்தனர். அப்போது ஒருவரை பார்த்து மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். ஆனால் கத்ரீனா ரன்பிரிடம் சென்று காதலை புதுப்பிக்கலாமா என்று கெஞ்சி கேட்க அவரோ எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

புரியட்டும்

புரியட்டும்

ரன்பிர் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியதும் கத்ரீனா மிகவும் கவலை அடைந்தார். ரன்பிருடன் மீண்டும் சேரலாம் என்று அவர் இனியும் நம்ப மாட்டார். கத்ரீனா சின்சியராக இருந்தும் ரன்பிர் அவரை ஏமாற்றிவிட்டார் என்று கத்ரீனாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Bollywood actress Katrina Kaif met her former boyfriend Ranbir Kapoor and requested him for a patch up but he firmly told her that the relationship is over.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil