குவியும் இந்தி வாய்ப்பு.. மேலும் ஒரு பாலிவுட் படத்தில் விஜய் சேதுபதி.. ஹீரோயின் இவர்தானாமே?

By

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மற்றொரு இந்திப் படத்தில், அவர் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இருந்து சமீபத்தில் விலகினார்.

லால் சிங் சத்தா

லால் சிங் சத்தா

பின்னர் ஆமிர்கான் நடிக்கும் இந்தி படமான 'லால் சிங் சத்தா'வில் இருந்தும் விலகினார். இதைப் படக்குழு உறுதிப்படுத்தியது. இப்போது மாமனிதன், ஜனநாதனின் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், தீபக் சுந்தர்ராஜனின் அனபெல் சுப்ரமணியம் படங்களில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

ஷாகித் கபூர்

ஷாகித் கபூர்

துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மலையாளத்தில் ஒரு படம் என நடித்து வரும் அவர், அடுத்து வெப் சிரீஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை அமேசான் பிரைம் தயாரிக்கிறது. இந்த தொடரில் அவர் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

மற்றொரு முக்கிய கேரக்டரில் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன் நடிக்கிறார். பான் இந்தியா தொடராக உருவாக்குவதற்கு தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தேவை என்பதால் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தொடர் மூலம் அவர் வெப் சிரீஸில் அறிமுகமாகிறார்.

ஶ்ரீராம் ராகவன்

ஶ்ரீராம் ராகவன்

இதையடுத்து தமிழில் ஹிட்டான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகர் என்ற படத்தில் நடிக்கிறார். இதை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். மற்றொரு நாயகனாக விக்ராந்த் மாசே நடிக்கிறார். இந்நிலையில் பிரபல இந்திப் பட இயக்குனர் ஶ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த இந்தி படத்திலும் நடிக்க இருக்கிறார், விஜய் சேதுபதி.

கேத்ரினா கைஃப்

கேத்ரினா கைஃப்

அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X