ஹ்ரித்திக்கை பார்க்க பறந்து வந்த கத்ரீனா
மும்பை: மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனை கத்ரீனா கைஃப் மருத்துவமனைக்கு சென்று சந்தித்து பேசினார்.
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளார். மருத்துவமனையில் இருக்கும் அவரை பாலிவுட் பிரபலங்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கத்ரீனா கைஃப் தனது காதலர் ரன்பிர் கபூருடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் அங்கிருந்து நேராக மருத்துவமனைக்கு சென்று ஹ்ரித்திக்கை சந்தித்து நலம் விசாரித்தார்.
அவர் மருத்துவமனைக்கு சென்றபோது நடிகை தியா மிர்சா, இயக்குனர் கரண் ஜோஹார் மற்றும் நடிகர் அர்ஜுன் ராம்பல் ஆகியோரும் வந்திருந்தனர்.

கத்ரீனா கைஃப்
புகைப்படக்காரர்களுக்கு சிக்காமல் செல்லும் கத்ரீனா.

தியா மிர்சா
மருத்துவமனை வாசலில் தியா மிர்சா.

கரண்
ஹ்ரித்திக்கை சந்தித்துவிட்டு கிளம்பும் இயக்குனர் கரண் ஜோஹார்.

அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் ராம்பல் மருத்துவமனைக்குள் செல்கிறார்.

இன்று வீடு திரும்பினார்
ஹ்ரித்திக் ரோஷன் இன்று மதியம் வீடு திரும்பினார்.


Click it and Unblock the Notifications











