பாவம் பஞ்சத்துல இருக்காரு போல.. சட்டையில் பட்டன் இல்லாமல் சேஃப்டி பின் குத்தி போஸ் கொடுத்த கத்ரீனா!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்பின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
முதலில் கத்ரீனாவின் அழகிய ரசிகர்கள், சட்டென அவரது சட்டையில் பட்டன் இல்லாமல் சேஃப்டி பின் குத்தியிருந்ததை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.
நல்லாதானே இருந்தார் கத்ரீனாவுக்கு என்ன ஆச்சு என கலாய்த்தும் வருகின்றனர்.

18 ஆண்டுகள்
2003ம் ஆண்டு பூம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கத்ரீனா கைப், தூம் 3, பேங் பேங், ஜப் தக் ஹை ஜான், ஏக் தா டைகர் என பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் என அனைவரிடமும் நடித்துள்ளார். சுமார் 18 ஆண்டுகள் இந்திய ரசிகர்களின் க்ரஷ் ஆகவும் அதே அழகுடன் ஜொலிக்கிறார்.

மாம்பழம் போல
பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஸ்லைஸ்' விளம்பரத்தில் பார்த்தது போலவே இப்பவும் அப்படியே மாம்பழம் போல இருக்காரு கத்ரீனா கைஃப். அரேபியன் குதிரை, அழகான ராட்சசி, பேரழகி என ஏகப்பட்ட பட்டப்பெயர்களில் இன்னமும் இந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே கத்ரீனா கைஃப் வலம் வருகிறார்.

சேஃப்டி பின்
இந்நிலையில், தற்போது சட்டையில் பட்டனுக்கு பதிலாக சேஃப்டி பின்களை குத்திக் கொண்டு புதிய ஃபேஷன் ஸ்டேட்மென்ட் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் கத்ரீனா கைஃப். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், வாவ் இது என்ன புது ஃபேஷனாக இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பஞ்சம் போல
மேலும், சில நெட்டிசன்கள், இதெல்லாம் ஒரு ஃபேஷனா? பாவம் பஞ்சத்துல இருக்காரு போல கத்ரீனா கைஃப், புதுசா டிரெஸ் வாங்கக் கூட காசு இல்லாமல், பட்டன்கள் கழண்ட உடையை சேஃப்டி பின் குத்திக் கொண்டு உடுத்தியுள்ளார் என மரண பங்கம் செய்து வருகின்றனர்.

ஏப்ரல் மாதம்
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் அதிரடி காப் ஸ்டோரியாக உருவாகி உள்ள சூர்யவன்ஷி திரைப்படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் அதிரடி காட்ட உள்ளார் கத்ரீனா கைஃப்.


Click it and Unblock the Notifications











