Don't Miss!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- News
2022ம் ஆண்டில் பதிவான அதிக அளவிலான மரண தண்டனை.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு! ஷாக் ரிப்போர்ட்
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய் சேதுபதி -கத்ரினா நடித்துவரும் மெர்ரி கிறிஸ்துமஸ் பட படங்கள்.. கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்கே!
மும்பை : நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமில்லாமல் அடுத்ததாக பாலிவுட்டிலும் பிசியாகியுள்ளார். இதன்மூலம் பான் இந்தியா நாயகனாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.
தற்போது பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் கத்ரினாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
அந்தக் கதைக்கு ரஜினிதான் சரி... வைரமுத்து குறிப்பிட்ட கதை தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தமிழின் மிகவும் முக்கியமான நடிகராக மாறியுள்ளார். அடுத்தடுத்து சிறப்பான கேரக்டர்களில் இவர் நடித்து வருகிறார். வில்லனாக மரட்டுகிறார். மாமனிதனாக மாறி அசத்துகிறார். இவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

இமேஜ் குறித்த கவலையில்லை
தன்னுடைய இமேஜ் குறித்து இவர் எப்போதும் கவலைக் கொள்வதில்லை. மாறாக, கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். சிறப்பான கேரக்டர் என்றால் அதற்காக எந்த சமரசத்தையும் தன்னுடைய கால்ஷீட்டிலும் சம்பளத்திலும் இவர் செய்து வருகிறார். ரசிகர்களும் இவரை இப்படி வித்தியாசமான கேரக்டர்களில் பார்க்கவே விரும்புகின்றனர்.

மற்ற மொழிகளிலும் பிசி
தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் மோஸ்ட் வான்டட் நடிகராக மாறியுள்ளார். அடுத்ததாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் இவரை வில்லனாக இயக்குநர்கள் கேட்டு வருகின்றனர். அடுத்தடுத்து மலையாளம், இந்தியிலும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள்
இவருக்கு மட்டும் எப்படி இத்தனை மொழிகளில் நடிக்க நேரம் கிடைக்கிறது என்ற கமெண்ட்ஸ்கள் இவரைப் பொருத்தவரை எழாமல் இல்லை. ஆனாலும் தன்னுடைய நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஏற்கனவே இவர் மும்பைகர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கத்ரினாவுடன் படம்
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான இந்தப் படத்தில் முனீஷ்காந்த் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.இதையடுத்து தற்போது பிரபல ஹீரோயின் கத்ரினா கையிஃப்புடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தாதூன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கிறிஸ்துமசில் ரிலீஸ்
வரும் டிசம்பரில் கிறிஸ்துமசையொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் கத்ரினா வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்கள் வெளியீடு
இந்தப் படங்களில் கத்ரினா, ஸ்ரீராம் ராகவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் படம் குறித்த விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களில் கத்ரினாவுடன் இணைந்து காணப்படும் விஜய் சேதுபதி மிகவும் ஸ்மார்ட்டாக காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.