ஹாப்பி ஒன் மன்த் மை லவ்... கணவருக்கு வாழ்த்து சொன்ன கத்ரீனா கைஃப்
மும்பை : பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசால் இருவருக்கும் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது.
முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனதையொட்டி கத்ரீனா கைஃப் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கத்ரீனா -விக்கி திருமணம்
கடந்த மாதம் 9ம் தேதி பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசால் இருவருக்கும் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. ராஜஸ்தானில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இந்த திருமணம் நடைபெற்றது. இதில் பாலிவுட் திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

காதல் திருமணம்
முன்னதாக இவர்கள் இருவரும் கடந்த 2019 முதல் காதலித்து வந்தனர். ஆனால் வெளியில் அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட இவர்கள் கடந்த 9ம் தேதி திருமணம் செய்தனர். இவர்களுக்கு விலைமதிப்புள்ள கார் உள்ளிட்டவை பரிசாக கிடைத்தன.

ரசிகர்கள் வியப்பு
தொடர்ந்து தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கத்ரீனா, அன்பு மட்டுமே தங்களை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இவர்களது திருமணம் குறித்த பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

பிரம்மாண்டமான திருமணம்
இவர்கள் தங்கிய ஹோட்டல் அறையின் ஒரு நாள் வாடகை மட்டுமே 7 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் திருமணம் நடைபெற்ற ரெசார்ட் இவர்களுக்கு இலவசமாக கிடைத்தது. மேலும் விருந்தின் மெனுக்களும் வெளியிடப்பட்டு வியப்பை ஏற்படுத்தின.

ஒரு மாதம் நிறைவு
மொத்தத்தில் பாலிவுட் பிரம்மாண்டமாய் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இவர்கள் திருமணம் நடைபெற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கத்ரீனா கைஃப்.

கத்ரீனா வாழ்த்து
ஹேப்பி ஒன் மன்த் மை லவ் என்று அவர் லவ் எமோஜியுடன் இந்த பதிவை செய்துள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தற்போது இவாகள் புதிய அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார்கள். இந்த அப்பார்ட்மெண்டிற்கு பக்கத்தில் விராட் -அனுஷ்கா தம்பதி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











