திருமண பந்தத்தில் இணையும் கத்ரீனா கைஃப்…மாப்பிள்ளை யார் தெரியுமா?
மும்பை : நடிகை கத்ரீனா கைஃப்பும் விக்கி கௌஷலும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவர்.
அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப் பத்மலட்சுமி உட்பட பலர் நடித்த பூம் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த இவர், தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சிப்புயலாக உலா வருகிறார்.

ஹாங்காங்கில் பிறந்தார்
ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த கத்ரீனா, குழந்தையாக இருக்கும் போதே பல நாடுகளை சுற்றி வந்துள்ளார். இவருக்கு மிகவும் பிடித்தமான இடம் எது என்றால் அது லாஸ் ஏஞ்சல்ஸ் தானாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது அங்கு விசிட் அடித்து விடுவதை இவர் வழக்கமாகவே கொண்டுள்ளார்.

பாலிவுட் நம்பர் 1
பாலிவுட் கனவுக்கன்னி காத்ரினா கைஃப், ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இதனால், லண்டனில் பல நிறுவனங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

குத்தாட்டம்
கத்ரீனா கைஃப் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.அதேசமயம் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டும் செல்லும் கத்ரீனா கைஃப், வளைந்து
நெளிந்து ஆடும் தனது ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்று வரை கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திருமணம்
இந்நிலையில் இவர் விக்கி கௌஷல் என்பவரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அந்த நட்சத்திர ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவர்களது திருமணத்திற்கு கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலரான சல்மான் கான் பண்ணை வீட்டை தருவதாக கூறியுள்ளாராம். மேலும் இவர்களது திருமணத்திற்கு சல்மான், யூலியா, ரன்பீர் கபூர், ஆலியா பட், அக்ஷசை குமார், டிங்கில் கண்ணா, இசபெல் கைஃ ப் என முக்கியமானவர்களை மட்டுமே அழைக்க கத்ரீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











