twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களின் கல்விக்காக குரல் கொடுக்கும் நடிகை.. தூதராக நியமனம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    பெண்களின் கல்விக்காக குரல் கொடுக்கும் கத்ரீனா- வீடியோ

    மும்பை : இந்தியாவில் இருக்கும் பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் அமைப்பு 'எஜுகேட் கேர்ள்'. இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரினா கைஃப்.

    " 'எஜுகேட் கேர்ள்' பொறுப்புக்கு தகுதியானவர் கத்ரீனா. அவருக்கு சட்டமும் தெரியும், பெண் முன்னேற்றம் குறித்தும், பெண் கல்வி குறித்து உலக நாடுகளில் பேசி வருகிறார். அவர் தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்தப் பணியை முன்பை விட வேகமாக முன்னெடுத்துச் செல்வோம்" எனக் கூறியுள்ளார் இந்த அமைப்பின் நிறுவனர் சபீனா.

    Katrina kaif works as ambassador of educate girl organisation

    தூதராக நியமிக்கப்பட்டது குறித்து கத்ரீனா கூறியதாவது, "கிராமப்புற மற்றும் ஆதிவாசி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதிலும், உயர்கல்வி கற்பதிலும் இன்னும் தடைகள் உள்ளது. பள்ளியில் இடைநிற்கும் பெண்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக இந்த அமைப்பு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறது.

    ஆண்களுக்கு சமமாக பெண்களும் தரமான கல்வியைப் பெறுவதற்காக உழைக்கவே இந்தப் பணியில் நான் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். பெண்களின் கல்வி உரிமைக்காகப் பாடுபடுவேன்" எனக் கூறியுள்ளார் கத்ரீனா கைஃப்.

    English summary
    Bollywood actress Katrina Kaif has been appointed as the ambassador of 'Educate girl' organization.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X