இந்த பொண்ணு என்ன இப்படி குட்டி, குட்டியா டிரஸ் போடுது: ஸ்ரீதேவி மகளை விமர்சித்த நடிகை

By Siva

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ரொம்ப குட்டி, குட்டியாக ஷார்ட்ஸ் அணிவது குறித்து பேசிய நடிகை கத்ரீனா கைஃபுக்கு நடிகை சோனம் கபூர் பதில் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது ரொம்ப குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து செல்வார். அதை பார்த்து நெட்டிசன்கள் என்னம்மா, இப்படி உடை அணிகிறீர்களே என்று அவ்வப்போது கிண்டல் செய்கிறார்கள்.

ஒரு முறை ஜான்வி அந்த குட்டி ஷார்ட்ஸ் அணிந்து டி சர்ட் போட்டு வெளியே வந்தார். டி சர்ட் நீளமாக இருந்ததால் ஷார்ட்ஸ் தெரியவில்லை. இதையடுத்து பேண்ட் போட மறந்துவிட்டீர்கள் ஜான்வி என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

 கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நேஹா தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் பிரபலங்கள் ஜிம்முக்கு ஒர்க்அவுட் செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கத்ரீனாவோ, ஜான்வி கபூர் அணிந்து வரும் உடை பற்றி கவலை தெரிவித்தார்.

 ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் அணிந்து வரும் ரொம்ப, ரொம்ப குட்டியான ஷார்ட்ஸை பார்த்து தான் கவலையாக உள்ளது. அவர் நான் போகும் ஜிம்முக்கும் வருகிறார். அடிக்கடி சேர்ந்து ஒர்க்அவுட் செய்கிறோம். ஜான்வி பற்றி சில நேரம் கவலையாக இருக்கும் என்று கத்ரீனா கைஃப் நேஹா தூபியாவிடம் தெரிவித்தார்.

 சோனம் கபூர்

சோனம் கபூர்

ஜான்வி அணியும் ஷார்ட்ஸ் பற்றி கத்ரீனா கைஃப் கூறியதை டிவியில் பார்த்த பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு கோபம் வந்துவிட்டது. தனது பெரியம்மா ஸ்ரீதேவியின் மகளை கத்ரீனா விமர்சித்தது சோனம் கபூருக்கு பிடிக்கவில்லை. உடனே ஜான்வியின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஜான்வி சாதாரண உடையும் அணிவார். அதில் அவர் அழகாகவும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார் சோனம் கபூர்.

 மலாய்கா அரோரா

மலாய்கா அரோரா

ஜான்வி கபூர் மட்டும் அல்ல பாலிவுட் நடிகைகள் சாரா அலி கான், மலாய்கா அரோராவும் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து ஜிம்முக்கு செல்கிறார்கள். சீனியர் நடிகையான மலாய்கா இப்படி குட்டி ஷார்ட்ஸ் அணிவதற்காக நெட்டிசன்கள் அவரை பலமுறை கலாய்த்துள்ளனர். 16 வயதில் மகன் இருக்கும்போது இப்படி டிரஸ் போடலாமா என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X