»   »  நடிகை கத்ரீனா, நடிகர் ரன்பிர் கபூரால் தலைமுடியை பிய்த்துக்கொள்ளும் இயக்குனர்

நடிகை கத்ரீனா, நடிகர் ரன்பிர் கபூரால் தலைமுடியை பிய்த்துக்கொள்ளும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் ரன்பிர் கபூரால் ஜக்கா ஜசூஸ் பட இயக்குனர் தலை முடியை பிய்த்துக் கொள்கிறாராம்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் ரன்பிர் கபூரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். ஒரே வீட்டில் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்த அவர்களின் காதலில் இடி விழுந்து ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடிவிட்டனர்.

காதல் முறிந்த கையோடு ரன்பிர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார்.

ஜக்கா ஜசூஸ்

ஜக்கா ஜசூஸ்

ரன்பிரும், கத்ரீனாவும் காதலர்களாக இருக்கையில் துவங்கப்பட்ட படம் ஜக்கா ஜசூஸ். அனுராக் பாசு இயக்கி வருகிறார். படத்தை அனுராக் பாசுவுடன் சேர்ந்து தயாரிப்பது வேறு யாரும் அல்ல ரன்பிர் கபூரே தான்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஜக்கா ஜசூஸ் படப்பிடிப்பில் முன்னாள் காதலர்களான ரன்பிரும், கத்ரீனாவும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு மொராக்கோவில் நடந்து வருகிறது. எல்லாம் நல்ல படியாகத் தானே செல்கிறது என்று நினைக்க வேண்டாம்.

கத்ரீனா

கத்ரீனா

மும்பையில் இருந்து மொராக்கோவுக்கு கத்ரீனா பயணம் செய்த அதே விமானத்தில் பறக்க ரன்பிர் மறுத்துவிட்டார். இதனால் ஆளுக்கொரு விமானத்தில் மொராக்கோ சென்றனர். அங்கும் ஆளுக்கு ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

ரன்பிர்

ரன்பிர்

கண்களில் காதல் உணர்ச்சி பொங்கி வழிய நடிக்க வேண்டிய காட்சிகளில் ரன்பிரும், கத்ரீனாவும் கடுகடுப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து பார்த்து இயக்குனருக்கு பி.பி. ஏறிக் கொண்டிருக்கிறது.

வேண்டாம்

வேண்டாம்

கத்ரீனாவோட எல்லாம் என்னால் நெருங்கி நடிக்க முடியாது. அதனால் அவருடன் நான் நெருங்கி நடிக்கும் காட்சிகள் வேண்டாம் என்று கறாராக கூறிவிட்டாராம் ரன்பிர். பாலிவுட் படம் என்றால் நெருக்கமான காட்சிகள் இல்லாமலா. அப்படி இருக்கையில் ரன்பிர் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

ஆலியா பட்

ஆலியா பட்

ரன்பிர், கத்ரீனா பஞ்சாயத்தே பெரும் பஞ்சாயத்தாக உள்ளது. இந்நிலையில் நடிகை ஆலியா பட்டும், அவரது காதலரும், நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவும் சண்டை போட்டு பேசாமல் இருப்பதற்கு காரணம் கத்ரீனா என்று பாலிவுட்காரர்கள் கூறுகிறார்கள்.

English summary
Former love birds Katrina Kaif and Ranbir Kapoor are reportedly giving head ache to Jagga Jasoos director Anurag Basu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil