காட்டேரி டிரெய்லர் ரிலீஸ்.. யாமிருக்க பயமே இயக்குநரின் அடுத்த ரோலர் கோஸ்டர்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: 'யாமிருக்க பயமே' படத்தை இயக்கி ஹிட் அடித்த இயக்குநர் டீகே இயக்கத்தில் உருவாகி உள்ள காட்டேரி திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது.

எப்பவோ வரவேண்டிய இந்த படம் ஏகப்பட்ட கால தாமதத்திற்கு பிறகு வரும் கிறிஸ்துமஸ்க்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது.

வைபவ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ஆத்மிகா மற்றும் சோனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேய் ஹிட்

பேய் ஹிட்

காமெடி ஹாரர் ஜானரில் காஞ்சனா படம் போல வந்த யாமிருக்க பயமே திரைப்படம் பேய் ஹிட் அடித்தது. இந்த படத்தில் வந்த பன்னி மூஞ்சி வாயா காமெடிக்கு பிறகு தான் யோகி பாபுவுக்கு சினிமாவில் வேற லெவல் யோகம் அடித்தது. கிருஷ்ணா, ஓவியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்த அந்த படம் 2014ம் ஆண்டு வெளியானது.

லாங் கேப்

லாங் கேப்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் டீகே இயக்கத்தில் உருவாகி உள்ள காட்டேரி திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏகப்பட்ட ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போன கொடுமை இந்த படத்திற்கும் அரங்கேறியது.

மீசையை முறுக்கு ஆத்மிகா

மீசையை முறுக்கு ஆத்மிகா

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஆத்மிகா நடிப்பில் உருவான இந்த படம் ஒருவழியாக வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது. ஆனால், இன்னமும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் படம் என்ன ஆனது என்று தான் தெரியவில்லை. ஒவ்வொரு தீபாவளியாக போய்க் கொண்டு இருக்கிறது.

காட்டேரி டிரெய்லர்

இயக்குநர் டீகே இயக்கத்தில் வைபவ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது. வழக்கம் போல இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகி உள்ளது டிரெய்லர் பார்த்தாலே தெரிகிறது.

கவர்ச்சி காட்டேரி

கவர்ச்சி காட்டேரி

காட்டேரி என டைட்டில் வைத்து விட்டு மூன்று நாயகிகளை ஒப்பந்தம் செய்துவிட்டு, ஒரு கில்மா சீன் கூட இல்லை என்றால் எப்படி? என்பதற்கேற்ப கவர்ச்சி காட்டேரியாக நடிகை சோனம் பஜ்வா பிகினி உடையில் நீரில் இருந்து வெளிவரும் காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X