இரு மொழிகளில் தயாராகும் "கட்டில்" திரைப்படம்
சென்னை : கட்டில் திரைப்படம் மலையாளத்திலும் கட்டில் என்ற பெயரிலேயே உருவாக உள்ளது.
நவம்பர் மாதம் பூஜைகள் போடப்பட்ட கட்டில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் படுஜோராக நடந்துக் கொண்டு இருகின்றன. மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் கட்டில் திரைப்படம் மலையாளத்திலும் "கட்டில்" என்ற பெயரிலேயே எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேகா, டார்லிங், தர்மதுரை, முப்பரிமாணம் ஆகிய படங்களில் ஒரு முக்கிய கதாபாத்தில் இவர் நடிந்துள்ளார். மேலும் சேரனின் ராஜாவுக்கு செக் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 24ந் தேதி வெளியாக உள்ளது.
மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக இப்படத்தில் களமிறங்கி இருக்கி உள்ளார். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்கள்.
பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுள்ளார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். "மெட்டிஒலி" சாந்தி நடனம் அமைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











