38 வயதில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்கச் சொன்ன விஜய் பட ஹீரோயின்
சென்னை: நடிகை கவுசல்யா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
காலமெல்லாம் காதல் வாழ்க படம் மூலம் கோலிவுட் வந்தவர் கவுசல்யா. இரண்டாவது தமிழ் படமான நேருக்கு நேரிலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.

ப்ரியமுடன் படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 22 ஆண்டுகளாக திரையுலகில் உள்ள அவர் தற்போது தான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் அவருக்கு இளம் வயதில் திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லையாம். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ளும் ஆசை ஏற்பட்டுள்ளதாம்.
இதையடுத்து தனக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்க்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளாராம் கவுசல்யா. அவரின் பெற்றோரும் மாப்பிள்ளை தேடும் வேலையை துவங்கிவிட்டார்களாம்.
விரைவில் திருமண செய்தியை எதிர்பார்க்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications