twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கும், என் மகனுக்கும் "லிப்லாக்" சீன் கொடுங்க.. டைரக்டர் கணவரிடம் கேட்ட புரட்சி நடிகை!

    By Sudha
    |

    கொல்கத்தா: எனக்கும், என் மகனுக்கும் உதட்டுடன் உதடு பதித்து முத்தமிடும் காட்சியை வையுங்கள் என்று ஒரு நாடக நடிகை, நாடக இயக்குநரான தனது கணவரிடம் வேண்டுகோள் வைத்து புரட்சி செய்துள்ளார் கொல்கத்தாவில்.

    இந்த நாடகத்தில் தாயும் மகனும் காதலர்களாக வேறு வருகிறார்களாம்.

    இப்படி தாயும், மகனும் ஜோடி போட்டு நடித்ததாக இதுவரை எங்குமே கேள்விப்பட்டதில்லை என்பதால் கொல்கத்தாவே பரபரப்பாகியுள்ளது.

    கெளசிக் சென்

    கெளசிக் சென்

    கொல்கத்தாவைச் சேர்ந்த நாடக இயக்குநர் கெளசிக் சென். இவர் சையத் முஜ்தபா அலி என்பவருடைய சச்சா கஹினி என்ற சிறுகதையிலிருந்து ஒரு நாடகத்தை உருவாக்கியுள்ளார்.

    தாயும் மகனும் ஜோடிகள்

    தாயும் மகனும் ஜோடிகள்

    இதில்தான் ஒரு பகுதியில் கெளசிக்கின் ரித்தி சென் மற்றும் மனைவி ரேஷ்மி சென் ஆகியோர் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

    இளம் நாயகனும், வயதான நாயகியும்

    இளம் நாயகனும், வயதான நாயகியும்

    கதைப்படி இளம் சச்சா கேரக்டரில் ரித்தி நடிக்கிறார். அவரது வயது முதிர்ந்த காதலியாக அவரது தாயார் ரேஷ்மி வருகிறார்.

    பணமே குறிக்கோள்

    பணமே குறிக்கோள்

    இந்த கதையில் பணமே குறிக்கோள், பாசம், காதல் எல்லாம் சும்மா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மி வருகிறாராம். காதலன் காசில் நன்றாக சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, பொழுதைக் கழிப்பதுதான் இந்த கதாபாத்திரத்தின் முக்கிய அம்சங்களாம்.

    தாயுடன் நடிப்பது ஜாலியாக இருக்கிறது

    தாயுடன் நடிப்பது ஜாலியாக இருக்கிறது

    இந்த நாடகம் குறித்து ரித்தி கூறுகையில், எனது தாயாருடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாகவம், ஜாலியாகவும் இருக்கிறது. எங்களது வீ்ட்டிலேயே மிகவும் சிறந்த நடிப்பாளர் எனது தாயார்தான். அதற்கும் மேலாக அவர்தான் எனது முதல் காதல். எனவே நாடகத்திலும் நாங்கள் சிறப்பாக நடித்துள்ளோம் என்கிறார்.

    லிப்லாக் கேட்டேன்.. தரலை

    லிப்லாக் கேட்டேன்.. தரலை

    தாயார் ரேஷ்மியோ ஒரு படி மேலே போயுள்ளார். அவர் கூறுகையில், இந்த நாடகத்தில் எனக்கும், ரித்திக்கும் இடையே லிப்லாக் காட்சி வையுங்கள் என்று நான் இயக்குநரிடம் கேட்டேன். அவர் வேண்டாம் என்று கூறி விட்டார் என்கிறார்.

    என்னத்தச் சொல்லன்னு தெரியலையே....!

    English summary
    Kaushik Sen's play, Punoscho, based on Syed Mujtaba Ali's eponymous short story from Chacha Kahini boasts of a unique pairing. In a first, his son, Riddhi, and wife Reshmi play lovers on stage! Reshmi is happy about playing an older lover to her son. "I even insisted that Riddhi and I should have a liplock on stage, but our director (Kaushik) said no," she says.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X