என்ன கொடுமைடா சாமி.. பிரபல இயக்குனர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!
சென்னை: உண்மை கதையை மையமாக வைத்து ஆக்ஷன் கதையை உருவாக்கிய இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைத்துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது என தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
பல இயக்குனர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நாகேந்திரன். 2015 ஆம் ஆண்டு வெளியான காவல் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். உண்மை கதையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், விமல், சமுத்திரக்கனி, புன்னகைப்பூ கீதா, நமோ நாராயணன், எம் எஸ் பாஸ்கர், சிங்கம்புலி,அஸ்வின் ராஜா, இமாம் அண்ணாச்சி ஆகியோர் நடித்திருந்தனர். தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

இயக்குநர் மரணம்: இந்நிலையில், இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது. நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப்போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது. நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது.
காலம் யாருக்கு என்ன செய்யக் காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்திச் செல்கிறது. சகோதரனாய்.. நெருங்கிய நண்பனாய் பயணித்தவரை சட்டென்று இழந்துபோனதில் நெஞ்சம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும்... இவ்வதிர்ச்சியைத் தாங்கும் பலத்தையும் இறைவன் தரட்டும். நாகேந்திரன் மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறட்டும் என குறிப்பிட்டுள்ளார். இயக்குநரின் மறைவுக்கு திரைப்பிரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்தடுத்த மரணம்: கடந்த மாதம் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா மாரடைப்பால் உயிரிழந்தார். இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு, வீட்டில் ஓய்வாக இருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், இவரின் திடீர் மரணம் பலரை அதிர்ச்சயில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹுசைனி இறந்தார், மேலும், நடிகர் ராம்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து சீரியல் நடிகர் ஸ்ரீதர் திடீரென காலமானார்.இரவு நன்றாக பேசிக்கொண்டு இருந்த இவர் திடீரென மாரடைப்ப காரணமாக உயிரிழந்தார். மேலும், லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆண்டனி காலமானார். நடிகர் ஆண்டனி ஆஸ்துமா பிரச்சனை காரணமாக சில வருடங்களாகவே சிகிச்சை எடுத்து வந்தார். அது போல இடுப்புக்கு கீழே நீர் கோத்து அவரால் நிம்மதியாக படுத்து தூங்க கூட முடியாத அளவிற்கு அவதிப்பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது உயிர் பிரிந்தது. இவர்களின் மரணத்தில் இருந்தே மீண்டு வராத நிலையில், தற்போது இயக்குநர் நாகேந்திரன் உயிரிழந்துள்ளது திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











