காவல்துறை உங்கள் நண்பன்: எளிமையான கதை... திரில்லர் படம்

காவல்துறை உங்கள் நண்பன் என்பது தமிழக காவல்துறையின் தாரக மந்திரம். இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் படத்தின் இயக்குனர் ஆர்டிஎம். இந்தப் படத்தின் ஹீரோவாக சுரேஷ் ரவி நடிக்கிறார். ரவீனா ரவி நாயக

சென்னை: சன் மியூசிக் தொகுப்பாளராக பிரபலமானவர் சுரேஷ். ஹீரோவாக சில படங்கள் நடித்திருந்தாலும் இப்போது நம்பிக்கொண்டிருப்பது காவல்துறை உங்கள் நண்பன் படத்தை தான். பி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் காவல்துறை உங்கள் நண்பன். இப்படத்தில் சுரேஷ் ஜோடியாக ரவீனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர் பிரபல நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
படம் திரில்லர் கதை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Kaval Thurai Ungal Nanban to be a thriller drama says Director

"காவல்துறை உங்கள் நண்பன்" படம் மிக அழுத்தமான கதையையும், அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இப்படத்தினை பார்த்த உடனே இதை எந்த வகையிலும் விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து விட்டேன். இப்படத்தினை எளிமையும் தத்ரூபமும் கூடியதாகவும், அதே நேரத்தில் அனைத்து மக்களையும் கவரும் வகையிலும் படைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.டி.எம்.

தமிழ் சினிமா, போலீஸ்காரர்களை தொடர்ந்து எல்லா படங்களிலும் வில்லனாகவே காட்டி வருகிறது. 'சிங்கம்', 'சாமி', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய ஒரு சில படங்களே போலீசாரின் பெருமையை சொல்கிறது. இந்தப் படம் ஒரு போலீஸ் அதிகாரிக்கும், சாதாரண மனிதனுக்கும் இடையே உள்ள பிரச்னைகளை உணர்வுபூர்வமாக பேசுகிற படமாக இது உருவாகியுள்ளது என்கிறார் இயக்குனர் ஆர்டிம்.

ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். பல வித்தியாசமான லொகேஷன்ஸ் இந்த படத்தில் பார்க்கலாம் என்று படக்குழு சொல்லி உள்ளது. பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறதாம்.

படத்திற்கு UA சான்றிதழ் பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ரிலீஸிற்கு முன்பே கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக படத்தினை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது. நிறைய எதார்த்தமான சுவாரஸ்யமான காட்சிகள் கண்டிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த புதிய கூட்டணி வெற்றி பெற வேண்டும், அப்படி வெற்றி பெற்றால் தான் எதார்த்தமான நிறைய கதைகள் திரைக்கு வரும் என்பது நிதர்சனமான உண்மை.

More from Filmibeat

Read more about: suresh சுரேஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X