சூர்யாவுக்கு தீனி போடுற மாதிரி ஸ்க்ரிப்ட் இருக்கு.. 'காவல்துறை உங்கள் நண்பன்' இயக்குநர் பளீச்!
சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடுவது போன்ற கதை தன்னிடம் இருப்பதாக காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குநர் ஆர்டிஎம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் காவல்துறை உங்கள் நண்பன். ஆர்டிஎம் இயக்கத்தில் சுரேஷ் ரவி நடிப்பில் வெளியான இந்த க்ரைம் த்ரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சுரேஷ், ரவீணா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏற்கனவே சுரேஷ் - ஆர்டிஎம் கூட்டணி அதிமேதாவிகள் படத்தில் இணைந்து பணியாற்றியது.

பிரினீஸ் தயாரிப்பில்..
இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுரேஷுடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆர்டிஎம். சேரனின் திருமணம் படத்தை தயாரித்த பிரினீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

சூர்யாவுக்கு தீனி.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் ஆர்டிஎம் தன்னிடம் சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் மாதிரியான கதை உள்ளது என்று கூறியுள்ளார்.

சூர்யா மாதிரி ஒரு நடிகர்
அதாவது சூர்யா ரசிகர் ஒருவர், "உங்களின் கதைக்கு சூர்யா மாதிரி ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தால் வேற லெவலில் இருக்கும். அவர் நடிப்புக்கு தீனி போடுவது மாதிரியான ஒரு கதை ரெடி பண்ணுங்க சார்" என்று கேட்டிருந்தார்.

கதை ரெடியா இருக்கு
இதனை பார்த்த இயக்குநர் ஆர்டிஎம், "நன்றி.. சூர்யா சார் நடிப்புக்கு தீனி போடுற மாதிரி ஸ்க்ரிப்ட் இருக்கு.. சூர்யா சார்கிட்ட அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சதும் கண்டிப்பா சொல்வேன்" என்று பதிலளித்துள்ளார்.

சூர்யா டிவிட்டர் ஹேண்டில்
இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர். மேலும் இயக்குநர் ஆர்டிஎம்மின் டிவிட்டை ரீடிவிட் செய்து, இதுகுறித்து நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என நடிகர் சூர்யாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











