twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலீஸை சீண்டும் 'காவல்துறை உங்கள் நண்பன்'.. கடுப்பேத்தும் போஸ்டர்கள்.. தெறிக்கவிடும் வசனங்கள்!

    |

    சென்னை: காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் போஸ்டர்கள் போலீஸாரை சீண்டும் வகையில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சன் மியூஸிக் சேனலில் பிரபல விஜேவாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சுரேஷ் ரவி. இவரது நடிப்பில் ஏற்கனவே மோ என்ற படம் வெளியாகியிருக்கிறது.

    சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இந்நிலையில் சுரேஷ் நடித்துள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன்.

    டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

    டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

    இந்தப்படத்தில் சுரேஷ்க்கு ஜோடியாக ரவீனா ரவி நடித்துள்ளார்.
    டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீனா, எமி ஜாக்ஸன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். மேலும் மைம் கோபி, சூப்பர் குட் சுப்பிரமணி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர் ஜே முன்னா இப்படத்தின் மூலம் முதல் முறையாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார்.

    ரஹ்மானின் மாணவர்கள்

    ரஹ்மானின் மாணவர்கள்

    இப்படத்தை ஆர் டி எம் இயக்கியிருக்கிறார். பிஆர் கார்ப்ரேஷன்ஸ் அன்ட் வொய்ட் மூன் டாக்கிஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசைப்பள்ளியில் பயின்ற ஆதித்யா, சூர்யா ஆகியோர் இசையமைத்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள ராணி தேனீ காத்திருக்க என்ற ரொமான்டிக் பாடலின் சிங்கிள் ட்ராக் கடந்த திங்கள் கிழமை வெளியானது.

    ட்ரெயிலர் ரிலீஸ்

    ட்ரெயிலர் ரிலீஸ்

    அதனை தொடர்ந்து கடந்த புதன் கிழமை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. காவல்துறை உங்கள் நண்பன் படம் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. காவல்துறை உங்கள் நண்பன் படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் ட்ரெயிலரை நடிகர் பார்த்திபன் நேற்று வெளியிட்டார்.

    சீண்டும் போஸ்டர்கள்

    சீண்டும் போஸ்டர்கள்

    இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்கள் அனைத்துமே சர்ச்சைக்குரிய வகையிலேயே உள்ளது. படத்தின் போஸ்டர்களுக்கும் படத்தின் டைட்டிலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததை போலவே இருக்கிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் காவல்துறையை சீண்டும் வகையிலேயே உள்ளது.

    பிளேடை கொடுத்து

    பிளேடை கொடுத்து

    அதன்படி படத்தின் ஒரு போஸ்டரில் விபத்தில் சிக்கி, பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடக்கும் ஹீரோவிடம் போலீசார் போட்டி போட்டுக்கொண்டு லஞ்சம் வாங்குவதாக காட்டப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு போஸ்டரில், விசாரணை கைதியின் கையில் பிளேடை கொடுத்து நீயே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள் என்று கூறுவதை போல் காண்பிக்கப்பட்டுள்ளது.

    உண்மை சம்பவம்..

    உண்மை சம்பவம்..

    மேலும் விசாரணை கைதியை இருட்டு அறையில் அடைத்து வைத்து அடித்து நொறுக்குவது போன்றும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் கணவன் மனைவியை போலீஸ்காரர் ஒருவர் எட்டி உதைப்பது போன்ற திருச்சியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை உணர்த்தும் வகையிலும் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

    வெறி நாய்..

    வெறி நாய்..

    அதோடு ட்ரெயிலரில் இடம் பெற்றுள்ள டயலாக்குகளும் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக சட்டம் என்பது பணம் உள்ளவர்களுக்கு வீட்டு நாய், பணம் இல்லாதவர்களுக்கு வெறிநாய் என்ற வசனமும், நாங்க பப்ளிக் சர்வன்ட்தான் ஆனால் பப்ளிக்தான் எங்களுக்கு சர்வன்ட் என்ற வசனமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    பாம்பு மாதிரி..

    பாம்பு மாதிரி..

    ட்ரெயிலரில் இறுதியாக படத்தின் நாயகன் சுரேஷ் பேசும், நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டிருக்கேன், பிரச்சனைன்னு சொல்லி ஒரு முறை போலீஸ் ஸ்டேஷன்ல கால வச்சா அது கால சுத்துன பாம்பு மாதிரின்னு.. என்று முடியும் டயலாக்கும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்க இளைஞர் ஒருவர் போலீசாரை பகைத்துக்கொண்டால் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    English summary
    Kavalthurai Ungal Nanban movie posters in controversy. Movie posters attacks Police.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X