ராணி தேனீ காத்திருக்க.. கேட்கும்போதே கிக்கு ஏறுதே.. ஆர்யா வெளியிட்ட செம ரொமான்ட்டிக் சிங்கிள் ட்ராக்

சென்னை: காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் இடம்பெற்றுள்ள ராணி தேனீ காத்திருக்க பாடலின் சிங்கிள் ட்ராக் வீடியோவை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.

சன் மியூஸிக் சேனலில் விஜேவாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சுரேஷ் ரவி. இவர் மோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Kavalthurai Ungal Nanban movies Rani Theni single track released

இதில் மோ படம் ரிலீஸான நிலையில் மற்றொரு படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இந்நிலையில் விஜே சுரேஷ் மற்றும் ரவீனா ரவி ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருக்கும் படம் காவல்துறை உங்கள் நண்பன்.

படத்தின் கதாநாயகியான ரவீனா ரவி, எமி ஜாக்ஸன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இப்படத்தை இயக்குநர் ஆர் டி எம் இயக்கியிருக்கிறார். பிஆர் கார்ப்ரேஷன்ஸ் அன்ட் வொய்ட் மூன் டாக்கிஸ் இணைந்து காவல்துறை உங்கள் நண்பன் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசைப்பள்ளியில் பயின்ற ஆதித்யா, சூர்யா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு ஆல்பங்களை உருவாக்கியுள்ள இவர்கள் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள். இந்தப் படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ராணி தேனீ காத்திருக்க பாடலின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடல் ரொமான்டிக் மேலோடியாக உள்ளது. கணவன் மனைவி இடையேயான ரொமான்ஸ் பாடலாக உள்ளது ராணித் தேனீ. பாடல் வரிகளும் கிக்கேற்றும் வகையில் உள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது இப்பாடல். ராணி தேனீ பாடலை பாடலாசிரியர் ஞானகரவேல் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X