அதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்”.. படக்குழு மகிழ்ச்சி!

சென்னை :"காவல்துறை உங்கள் நண்பன்" படத்தின் மொத்த படக்குழுவும் முன் திரையிடல் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பிலும், பாராட்டிலும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

படம் பற்றி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, நிறைய திரையரங்குகளில் படம் வெளியாக காரணமாக அமைந்துள்ளது.

Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது...

வெளியாகி உள்ளது

வெளியாகி உள்ளது

ஒரு அற்புதமான பயணம் "காவல்துறை உங்கள் நண்பன்" படத்தில் எனக்கு அமைந்தது. பல்வேறு இடர்பாடுகளையும், பெரும் தடைகளையும் தாண்டி இப்படம் வெளிவந்துள்ளது. இப்படகுழுவின் அயராத உழைப்பும், ஒன்றிணைந்த உற்சாகத்திற்கும் இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. இந்த நீண்ட பொது முடக்க காலத்திலும் இப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்கிற எண்ணம் என்னுள் ஆழமாக இருந்தது.

எதிர்பார்த்தது

எதிர்பார்த்தது

தியேட்டரில் வெளியாகும்போது கண்டிப்பாக பெரும் பாராட்டுக்களை குவித்து, அனைவரையும் ஈர்க்கும் என உறுதியாக நம்பினேன். பத்திரிகையாளர்கள் காட்சிக்கு பிறகு ஊடக நண்பர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக பாராட்டுக்கள் கிடைத்தது.

வெற்றி மாறனுக்கு நன்றி

வெற்றி மாறனுக்கு நன்றி

மக்களின் நேரடியான அசைக்க முடியாத பாராட்டுக்கள், நேர்மறை விமர்சனங்கள் படத்திற்கு வியாபாரதளத்தில் மிகுந்த நல்ல பெயர் பெற்று தந்தது. அதோடு மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளும் கிடைத்தது. இப்படத்தினில் பங்கு கொண்டு இப்படத்தை பெரிய அளவில் முன்னெடுத்து சென்றதற்கு "காவல்துறை உங்கள் நண்பன்" படக்குழு சார்பாக இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

நிச்சயம் வெற்றி பெறும்

நிச்சயம் வெற்றி பெறும்

தென்னிந்தியா முழுவதிலும் 334 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரசிகர்களிடம் இப்படம் பெரும் பாராட்டை பெறும் என நம்புகிறோம். "காவல்துறை உங்கள் நண்பன்" திரைப்படம் சென்னை 18, செங்கல்பட்டு 62 , தெற்கு மற்றும் வடக்கு ஆற்காடு பகுதிகளில் 55, கோயம்புத்தூர் 56, மதுரை 36, திருச்சி 30, சேலம் 40, திருநெல்வேலி 16 மற்றும் கர்நாடகா 21 திரையரங்குகளில் வெளியாகிறது.

அற்புதமான நடிப்பு

அற்புதமான நடிப்பு

"காவல்துறை உங்கள் நண்பன்" படத்தில் சுரேஷ் ரவி, ரவீணா ரவி மையப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல். இயக்குநர் RDM இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தினை பாஸ்கரன், ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்கள். வெற்றிமாறனின் Grassroot film company உடன் இணைந்து Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X