மீண்டும் இணையும் 'காவல்துறை உங்கள் நண்பன்' கூட்டணி.. போலீஸாக மிரட்டப்போகும் "டெலிவரி பாய்"!

சென்னை: காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் கூட்டணி மீண்டும் புதிய புராஜெக்ட் ஒன்றில் இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் காவல்துறை உங்கள் நண்பன். ஆர்டிஎம் இயக்கத்தில் சுரேஷ் ரவி நடிப்பில் வெளியான இந்த க்ரைம் த்ரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிகார வர்க்கம் சாதாரண மக்களை எப்படி பந்தாடுகிறது என்பதை அச்சு பிசக்காமல் படம்பிடித்து காட்டியிருந்தார் ஆர்டிஎம்.

சிறந்த படம்

சிறந்த படம்

இதில் சுரேஷ் மற்றும் ரவீணா லீடிங் ரோலில் நடித்திருந்தனர். மைம் கோபி மிரட்டல் போலீஸ் அதிகாரியாக அலறவிட்டார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

இந்நிலையில் இயக்குநர் ஆர்டிஎம் மற்றும் நடிகர் சுரேஷ் ரவி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். முன்னதாக அதிமேதாவி படத்தில் இணைந்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைந்துள்ளது.

ஜூனில் ரோலிங்..

ஜூனில் ரோலிங்..

இந்தப் படத்தை சேரனின் திருமணம் படத்தை தயாரித்த தொழில் அதிபர் பிரேம்நாத் சிதம்பரத்தின் பிரனிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது நடிகர் விதார்த்தை வைத்து நக்ஷத்ரா படத்தை தயாரித்து வரும் பிரினிஸ் நிறுவனம் வரும் ஜூன் மாதம் இந்த புதிய படத்தை தொடங்க உள்ளது.

ப்ரி புரெடெக்ஷன் பணிகள்

ப்ரி புரெடெக்ஷன் பணிகள்

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில் ப்ரி புரெடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் நடிக்க உள்ள மற்ற ஆர்ட்டிஸ்டுகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்திற்கு விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார்.

ஃபுட் டெலிவரி பாய்

ஃபுட் டெலிவரி பாய்

இதனிடையே இந்தப் படத்தில் நடிகர் சுரேஷ் ரவி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக இயக்குநர் ஆர்டிஎம் தெரிவித்துள்ளார். காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் புட் டெலிவரி பாயாக நடித்த சுரேஷ் போலீசாரிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X