“ப்ளீஸ் பிக் பாஸ் நீங்களே கல்யாணம் பண்ணி வைச்சுடுங்க”.. கவிலியாவுக்காக சம்பந்தம் பேச தயாராகும் ஆர்மி

கவின் - லாஸ்லியா திருமணத்தை பிக் பாஸ் தான் நடத்தி வைக்க வேண்டும் என கவிலியா ஆர்மி கோரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

திருமணம் குறித்த முக்கிய தகவலை கூறிய லாஸ்லியா | losliya interview about her marriage

சென்னை: கவின் - லாஸ்லியா திருமணத்தை நடத்தி வைத்தே தீருவது எனத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளனர் கவிலியா ஆர்மியினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் தோறும் ஒரு டச்சிங்கான காதல் வருவது சகஜம் தான். ஆனால், கடந்த சீசன்களைவிட இம்முறை கவின் - லாஸ்லியா காதல் மக்கள் மனதில் கொஞ்சம் ஆழமாகவே பதிந்து விட்டது எனலாம்.

ஒரு கட்டத்திற்குப் பின் கவின் - லியாவைக் காட்டாத புரொமோக்களைக் கூட நெட்டிசன்கள் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர். அதோடு, கவிலியா என்ற பெயரில் புதிய ஆர்மிக்களும் முளைத்தன.

கவினுக்காக அழுத லாஸ்லியா

கவினுக்காக அழுத லாஸ்லியா

கவின் ஐந்து லட்ச ரூபாயோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட, லாஸ்லியா அழுததைப் பார்த்து அவரது ரசிகர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறைதான். கவினுக்காகவே லாஸ்லியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர்கள் தீவிரமாக உழைத்தனர். அதன் பலனாக லாஸ்லியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

லாஸ்லியாவின் கேள்வி

லாஸ்லியாவின் கேள்வி

பைனல்சுக்கு முன்பு கவின் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த போது, அவரிடம் லாஸ்லியா தங்களது காதல் பற்றித் தான் மறைமுகமாக விசாரித்தார். ‘வீட்ல என்ன சொன்னாங்க, பிரண்ட்ஸ் என்ன சொன்னாங்க' எனத் தங்களது காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அப்போதே அவர் தெரிந்து கொள்ள விரும்பினார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

பிக் பாஸ் வீட்டில் அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்த நெட்டிசன்கள், வெளியில் வந்ததும் முதல் வேலையாக தங்கள் காதலை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றே எதிர்பார்த்தனர். ஏனென்றால் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் கவினிடம் பேசும் போதெல்லாம், ‘மீதியை வெளியில் போய் பேசிக் கொள்ளலாம்' என்றே கூறி வந்தார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வெளியில் வந்ததும் இருவரும் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. இருவருமே தனித்தனியாக தங்களது நண்பர்களைச் சந்தித்து வருகிறார்களே தவிர, இதுவரை ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. இதனால் கவிலியா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இப்படியே போனால் சரிப்படாது என கவிலியா காதலைத் திருமணத்திற்கு கொண்டு செல்லும் வேலையில் ஆர்மியினர் ஈடுபடத் தொடங்கி விட்டனர். பிக் பாஸ் வீட்டில் நடந்த கவிலியா மொமண்ட்களை எல்லாம் தொகுத்து டிவிட்டரில் வெளியிட்டு வரும் அவர்கள், பிக் பாஸிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.

பிக் பாஸ் தான் செய்யணும்

பிக் பாஸ் தான் செய்யணும்

அதாவது கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்து, காதலை உருவாக்கியது பிக் பாஸ் தான். எனவே அவரே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாஸ்லியாவின் அப்பா மரியநேசனிடமும் தமிழக அம்மாக்கள் பெண் கேட்கத் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கவிலியா ஆர்மி

இது தொடர்பான டிவீட்டுகள் தான் தற்போது கவிலியா ஆர்மியினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். பைனல்ஸ் முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் கவினோ, லாஸ்லியாவோ இது பற்றி எதுவும் பேசாமல் இருப்பதால் கவிலியா ஆர்மியினர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி விட்டனர் போலும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X