Kavin: அனிருத் இசையில் கவினின் புதிய படம்... அதே க்யூட் ஹீரோயின்... டைரக்டர் யாருன்னு தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமான ஹீரோ கவின்.
விஜய் டிவி சீரியல், பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான கவின், லிஃப்ட், டாட திரைப்படங்கள் மூலம் சினிமாவிலும் கம்பேக் கொடுத்துள்ளார்.
கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அனிருத் இசையில் கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

பூஜையுடன் தொடங்கிய கவின் புதிய படம்
விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் கவின். அதேநேரம் சினிமாவிலும் சின்ன சின்ன கெஸ்ட் ரோல்களில் நடித்து வந்தார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற கவின் அதில் தனது சேட்டைகளால் ஸ்கோர் செய்தார். இதன் மூலம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன.
அதன்படி, கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நேரடியாக டிஸ்னி பிளஸ் தளத்தில் வெளியான லிஃப்ட் படத்தை ஓடிடி ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். அதன்பின்னர் கவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் டாடா. கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் இந்தப் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க, அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இதன்மூலைம் கவின் - அனிருத் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தனது நண்பர்கள் கவின், சதீஷுக்காக இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை டான்ஸ் மாஸ்டராக மட்டுமே வலம் வந்த சதீஷ், கவின் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
கவின் - சதீஷ் இணையும் திரைப்படம் பீல் குட் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் கவின் ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் வெளியான அயோத்தி படத்தில் ஷிவானி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ப்ரீத்தி அஸ்ரானி. விபத்தில் அம்மாவை இழந்த சோகத்தின் பரிதவிப்பை தனது கண்களாலே நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், அயோத்தி படத்தைத் தொடர்ந்து இப்போது கவினுடன் ஜோடியாகிவிட்டார் ப்ரீத்தி. கவின் - ப்ரீத்தி அஸ்ரானி என்ற இந்த க்யூட் ஜோடி திரையில் ரொமன்ஸ் ட்ரீட் கொடுக்கும் என எதிர்பார்கப்படுகிறது. முன்னதாக கவின் தற்போது ஒரு படத்திற்காக 2 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கவின் - சதீஷ் - அனிருத் இணையும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











