அந்தப்பக்கம் அவங்க ஜிம்முக்கு போறாங்க.. இந்தப்பக்கம் இவரு ஜிம்முக்கு போறாரு.. என்னவோ நடக்குது!

Recommended Video

Bigg Boss Kavin Latest post on instagram | Filmibeat tamil

சென்னை: திரைத்துறையில் அண்மைக்காலமாக பேசப்பட்டுப் வரும் காதல் ஜோடி ஒன்று திடீரென ஜிம்முக்கு சென்று தீயாய் வேலை செய்வது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. கவின் விஜய் டிவி மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்புபடுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இலங்கை தமிழரான லாஸ்லியா, செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அந்நாட்டு மக்களுக்கு பரிட்சயமானவர் என்ற அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

காதலை ஏற்ற கவின்

காதலை ஏற்ற கவின்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, ஏற்கனவே சாக்ஷியை காதலித்த கவினை காதலித்தார். கவினுடன் தொடர்ந்து கடலை போட்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு சாக்ஷியை கழட்டிவிட்ட கவின் லாஸ்லியாவின் காதலை ஏற்றார்.

அப்பாவிட்ட ரெய்டு

அப்பாவிட்ட ரெய்டு

இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். தங்களின் காதலை வெளியே சென்று அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதாக இருவரும் முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செம ரெய்டு விட்டார்.

போட்டோ அனுப்பிய அப்பா

போட்டோ அனுப்பிய அப்பா

இதனைத் தொடர்ந்து காதலை முறித்துக்கொள்வதாக பேசினர் இருவரும். ஆனாலும் எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ந்து காதல் கடலை என இருந்து வந்தனர். இதனால் தன்னை ஞாபகப்படுத்த எண்ணிய லாஸ்லியாவின் அப்பா, அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அவர் காலை பிடித்து லாஸ்லியா அழுத போட்டோவை அனுப்பி வைத்தார்.

வாயே திறக்கவில்லை

வாயே திறக்கவில்லை

கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய போது, தன்னையும் வெளியே அனுப்பிவிடுங்கள் என பிக்பாஸிடம் கதறினார் லாஸ்லியா. ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து இருவரும் வெளியே வந்த பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாயே திறக்கவில்லை.

அப்பாவின் நிபந்தனை

அப்பாவின் நிபந்தனை

பிக்பாஸ் கொண்டாட்டம், பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டி என பல நிகழ்ச்சிகள் நடத்தியபோதும் அதில் கவினும் லாஸ்லியாவும் பேசாமல் இருந்தனர். இதனால் அவர்களின் காதல் ஒரு டிராமா என பேசப்பட்டது. ஆனால் லாஸ்லியாவின் அப்பா ஓகே சொல்ல வேண்டுமானால் என போட்ட நிபந்தனையால்தான் இருவரும் பொது இடங்களில் பேசிக்கொள்வதில்லை என்றும் தகவல் வெளியானது.

லாஸ்லியா ஜிம் வீடியோ

லாஸ்லியா ஜிம் வீடியோ

இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக உள்ளனர். அண்மையில் லாஸ்லியா தான் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியவை வெளியிட்டார். இதன் மூலம் லாஸ்லியா புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அதற்காகதான் எடையை குறைக்கிறார் என கூறப்பட்டது.

போட்டோக்கள்

இந்நிலையில் கவினும் ஜிம்முக்கு சென்றுள்ளார். கவின் ஜிம்முக்கு செல்வது, யோகா செய்வது போன்ற வேலைகளில் இறங்கியுள்ளார். ஜிம்மில் தனது மாஸ்டருன் கவின் எடுத்துள்ள போட்டோக்களை அவரது ஃபேன்ஸ் க்ளப் டிவிட்டரில் ஷேர் செய்திருக்கிறது.

ஏதோ மர்மம்

இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் இப்படி ஜிம்மில் வேலை செய்கிறார்களே ஏதோ மர்மம் இருக்கிறது என கருத்து கூறி வருகின்றனர்.

இணைந்து நடிக்கிறார்களா?

இணைந்து நடிக்கிறார்களா?

ஒரு சிலர், ஏற்கனவே வெளியான தகவலை போல இருவரும் ராஜா ராணி பார்ட் 2 சீரியலில் இணைந்து நடிக்க உள்ளார்களா, அதற்காகதான் எடையை குறைக்க லாஸ்லியாவும் எடையை கூட்ட கவினும் ஜிம்முக்கு செல்கின்றனரா என சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X