மூத்த நடிகர் ’தெறி’ செல்லத்துரை மரணம்.. கவின் முதல் அம்ரிதா வரை இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்
சென்னை: மூத்த நடிகர் 'தெறி' செல்லத்துரை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த சினிமா பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவு செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், மாராடைப்பு காரணமாக நேற்று தனது வீட்டிலேயே உயிரிழந்த மூத்த நடிகர் செல்லத்துரையின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.

’தெறி’ செல்லத்துரை
"ஓஹோ அப்படியா" என இவர் பேசிய வசனம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. கத்தி, தெறி, ராஜா ராணி, மாரி, சிவாஜி என ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் செல்லத்துரை. தெறி படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்ட நிலையில், 'தெறி' செல்லத்துரை என்றே சினிமா வட்டத்தில் அழைக்கப்பட்டு வந்தார்.

மாரடைப்பு
நடிகர் விவேக், இயக்குநர் கே.வி. ஆனந்தை தொடர்ந்து நடிகர் செல்லத்துரையின் மரணமும் மாரடைப்பு காரணமாகவே நிகழ்ந்தது. 84 வயதான இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்ற நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
கவின் இரங்கல்
பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் மூத்த நடிகர் செல்லத்துரையின் புகைப்படங்களை பதிவிட்டு, "சென்று வாருங்கள் அய்யா" என ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கவினின் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

டெடி இயக்குநர் இரங்கல்
மிருதன், டிக் டிக் டிக், டெடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் மூத்த நடிகர் செல்லத்துரை நடித்த காட்சி ஒன்றை ஷேர் செய்து, #RIPChelladuraiAyya என்ற ஹாஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன்.
அம்ரிதா இரங்கல்
பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகை அம்ரிதா அய்யர் தற்போது கவினுடன் இணைந்து லிப்ட் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் கவினை தொடர்ந்து நடிகை அம்ரிதாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல்கள் செல்லத்துரை அய்யா என இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











