Mask Blue Sattai Maran Review: மாஸ்க் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. என்ன சொல்லியிருக்காருனு பாருங்க!
சென்னை: கவின், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்க். இந்த படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராகவும் களமிறங்கிங்கி உள்ளார் ஆண்ட்ரியா. படத்தை அறிமுக இயக்குநர் விக்ரமன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு வெற்றிமாறன் மெண்ட்டாராக செயல்பட்டுள்ளார். படம் நேற்று அதாவது நவம்பர் 21ஆம் தேதி வெளியானது. படம் எப்படி உள்ளது என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் தொடக்கத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பல நூறு கோடிகளை மாஸ்க் போட்ட கும்பல் கடத்திக் கொண்டு செல்கிறது. சமூக சேவை செய்பவராக ஆண்ட்ரியாவை காட்டுகிறார்கள். தனியார் துப்பறிவாளனாக கதாநாயகன் கவினைக் காட்டுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் பணத்தை திருடிச் சென்ற கும்பலை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களுக்கு என்ன காரணம், பணத்தை யார் திருடிச் சென்றது? அவர்களுக்கு என்ன தேவை என்பதற்கு ஒரு கதை உள்ளது, அது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.

வாய்ஸ் ஓவர்: இந்த படத்தை ஒரு டார்க் காமெடி படம் என்று நினைத்து எடுத்து வைத்துள்ளார்கள். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெரிய ஃப்ளாஷ் பேக் உள்ளது. இந்த ஃபிளாஷ் பேக்குக்குள் பல எமோஷனல் காட்சிகள் வருகிறது. ஆனால் அவை நமக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சில சீரியஸான காட்சிகள் வருகிறது, அதுவும் சீரியஸாக இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொல்லப்படும் கதை துண்டு துண்டாக ஓடிக் கொண்டு உள்ளது. இதை எடிட்டிங்கில் ஒட்டவைக்காமல், வாய்ஸ் ஓவரில் ஒட்ட வைத்துள்ளார்கள். முழு படத்தையும் வாய்ஸ் ஓவரில் தான் கதை சொல்லி இருக்கிறார்கள்.

திரைக்கதை: சுமாரான படம் கொடுக்க இந்த கதையே போதுமானதுதான். ஆனால் அதற்கான திரைக்கதையை செய்யாமல் கோட்டைவிட்டுவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். சூப்பர் மார்க்கெட் சீன் மற்றும் இடைவேளை காட்சி நன்றாக இருந்தது. இடைவேளைக்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சீனும் நன்றாக இருந்தது. வில்லன் கதாபாத்திரம் செம வீக்காக இருந்தது. வில்லன் கதாபாத்திரம், அதிகபட்சமாக குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்கிறார்கள். இதை பெரிய மேட்டர் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சார்லிக்கு உப்புச்சப்பில்லாத முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. விசுவலாக ஏதாவது எடுத்து வைத்திருந்தால் படத்தை தியேட்டரில் பார்க்கலாம், ஆனால் எல்லாம் ஆடியோவாக ஓடிக் கொண்டு உள்ளது. ஒலிச்சித்திரம் போல எடுத்து வாய்ஸ் ஓவரில் கதையை ஓட்டிக்கொண்டு உள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











