Mask 4th Day Collection: பாதியாக குறைந்த ‘மாஸ்க்‘ பட வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில் உருவாகியுள்ள "மாஸ்க்" திரைப்படம் நான்காவது நாளான திங்கள்கிழமை பாக்ஸ் ஆபிஸில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, முதல் மூன்று நாட்களில் கணிசமான வசூலை ஈட்டியது. ஆனால், வார நாட்கள் தொடங்கியவுடன் அதன் வசூல் குறைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில், ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் முக்கிய ரோலில் மாஸ்க் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நடிகை ஆண்ட்ரியாக தயாரித்துள்ளார். அந்த படத்திற்காக அவர் தனது வீட்டை அடமானமாக வைத்து இருப்பதாக, நடிகர் கவின் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

மாஸ்க் படத்தின் கதை: இப்படத்தில் கவின் பிரைவேட் நிறுவனத்தில் டிடெக்டிவாகவும், சமூக சேவகியாக ஆண்ட்ரியாவும், சிஎம் நாற்காலியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் பவனும் இருக்கின்றன. இந்த நேரத்தில், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்திற்கும் கவின், ஆண்ட்ரியா,பவனுக்கும் என்ன சம்மந்தம், 446 கோடி பணம் சூப்பர் மார்க்கெட்டிற்குள் ஏன் வந்தது? அந்த பணத்தை கொள்ளை அடித்தது யார்? என்பதை சுற்றி படத்தின் கதை நகர்கிறது. மாஸ்க்" படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கவின் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், படத்தின் திரைக்கதை மற்றும் விறுவிறுப்பு சாதாரணமாகவே இருந்ததாக பலர் விமர்சனங்களை தெரிவித்தனர்.
நான்காம் நாள் வசூல்: வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான மாஸ்க் திரைப்படம் முதல் நாளில் 1.15 கோடியும், இரண்டாம்அ நாளான சனிக்கிழமை ரூ 1.45கோடியையும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ரூ.1.4 கோடியை வசூலித்தது. வார இறுதி நாட்களில் மாஸ்க் திரைப்படம் கணிசமான வசூலை பெற்று வந்தது. ஆனால், நேற்று வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை என்பதால் படத்தின் வசூல் மொத்தமாக படுத்துவிட்டது. படத்தின் நான்காம் நாள் வசூல், வெறும் ரூ 31 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது. மொத்தத்தில் மாஸ்க் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.4.31 கோடியை வசூலித்துள்ளது. இந்த சரிவு படத்தின் எதிர்கால பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. மாஸ்க் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும், அதன் பட்ஜெட்டை எட்ட இன்னும் பல மடங்கு வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழுவினர் உள்ளனர். திரையரங்குகளில் போட்டி அதிகரித்துள்ள சூழலில், இந்தத் திரைப்படம் தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











