Mask Box Office: ஆண்ட்ரியா வீடு அம்போதானா?.. கவினோட மாஸ்க் கிழிஞ்சு தொங்குதேப்பா.. 3நாள் வசூல்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா நல்ல கதையை படமாக்கி பண்ணினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என தனது வீட்டை எல்லாம் அடமானம் வைத்து மாஸ்க் படத்தை தயாரித்து இருந்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். வெற்றிமாறன் ஆலோசனை வழங்க விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்த மாஸ்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், மக்கள் அந்த படத்தை பெரிதும் தியேட்டர்களில் கொண்டாடவில்லை என்பது பாக்ஸ் ஆபீஸ் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இந்த நவம்பர் மாதம் வெளியான துல்கர் சல்மானின் காந்தா படத்தைத் தொடர்ந்து பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான படம் மாஸ்க் தான். ஆனால், முன்னதாக கவின் தொடர்ந்து 2 ஃப்ளாப் படங்களை கொடுத்து ரசிகர்களை சோதித்து எடுத்த நிலையில், மாஸ்க் படத்தை பார்க்க மக்கள் பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லை.

Kavin and Andrea s Mask movie Day 3 Box Office Collections are not great

முதல் மூன்று நாட்கள் முடிவில் மாஸ்க் திரைப்படம் அள்ளிய வசூல் குறித்த தகவலை இங்கே பார்க்கலாம் வாங்க..

கவின், ஆண்ட்ரியாவுக்கு பாராட்டு: கவின் மற்றும் ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றனர். மாஸ்க் திரைப்படம் கண்டிப்பாக கவினுக்கு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்றும் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் டியூட் படத்துடன் வெளியான நிலையிலும், நல்ல கன்டென்ட் என்பதால் தொடர்ந்து நிலைத்து ஓடி வசூலை ஈட்டியது. ஆனால், வெள்ளிக்கிழமை வெளியான கவினின் மாஸ்க் திரைப்படம் சனி மற்றும் ஞாயிறு என வார விடுமுறை நாட்களில் பெரிதாக வசூலை அள்ளிக் கொடுக்கவில்லை.

மாஸ்க் 3 நாள் வசூல்: கவின், ஆண்ட்ரியாவை தாண்டி சார்லிக்கு நல்ல ஸ்கோப் உள்ள மாஸ்க் திரைப்படம் கடைசி வரை ரசிகர்களை என்கேஜிங்காகவே கொண்டு சென்றது. வெள்ளிக்கிழமை 1.15 கோடி வசூல் அள்ளிய மாஸ்க் திரைப்படம் சனிக்கிழமை 1.45 கோடி ரூபாயும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வெறும் 1.35 கோடி ரூபாய் என இதுவரை 3 நாட்கள் முடிவில் ஒட்டுமொத்தமாக 3.95 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. மாஸ்க் திரைப்படத்துடன் வெளியான மற்ற படங்களின் நிலவரம் இதை விட கவலைக்கிடமாக உள்ளது என்பது தான் நிதர்சனம். ஆனால், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் உள்ளிட்டவை தயாரிப்பாளர்களை காப்பாற்றி விடும் என்றே கூறுகின்றனர்.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் படங்கள்: இந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் திரைக்கு வருகிறது. மேலும், தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள தேரே இஷ்க் மே திரைப்படமும் வெளியாகிறது. அந்த 2 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் எந்தளவுக்கு கல்லா கட்டும் என்பதும் கேள்விக்குறி தான் என்கின்றனர். டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி பொங்கல் பண்டிகை தான் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்கள் தமிழ் சினிமாவில் கிடைக்கும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X