Kavin: செம்ம க்யூட்டான ஹீரோயின்... அலேக்காக தூக்கிய கவின்... எல்லாம் இவர் வேலைதானா?

சென்னை: டாடா வெற்றிக்குப் பின்னர் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன.

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகர், பிக் பாஸ் போட்டியாளர் என பல வகைகளில் தனது திறமைகளை வெளிக்காட்டினார்.

லிஃப்ட், டாடா திரைப்படங்கள் கவினுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளன.

இந்நிலையில், கவின் நடிக்கவுள்ள புதிய படத்தில் செம்ம க்யூட்டான நடிகை நாயகியாக கமிட் ஆகியுள்ளாராம்.

கவின் ஜோடியாகும் க்யூட் ஹீரோயின்:விஜய் டிவி சீரியல்கள் மூலம் நடிகராக களமிறங்கியவர் கவின். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற இலக்குடன் பயணித்த கவினுக்கு ஆரம்பத்தில் சின்ன சின்ன கெஸ்ட் ரோல்கள் தான் கிடைத்தன. பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற பின்னர் கவினுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

 Kavin And Ayothi Movie Fame Preethi Asrani Are Teaming Up For A Film

இதனையடுத்து 2021ம் ஆண்டு கவின் நடித்த லிஃப்ட் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான லிஃப்ட் வெற்றியால், அடுத்து டாடா படத்தில் ஹீரோவானார். கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. டாடா படத்தின் வெற்றியால் சூப்பராக கம்பேக் கொடுத்துள்ளார் கவின்.

இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ள நிலையில், சதீஷுடன் இணையும் படத்தின் ஷூட்டிங் இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இதுவும் கவினுக்கு ஏற்ற பீல் குட் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் இப்படம் குறித்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரம், கவின் - சதீஷ் இணையும் படத்தின் நாயகி குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கவினுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் வெளியான அயோத்தி படத்தில் ஷிவானி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். விபத்தில் அம்மாவை இழந்த சோகத்தின் பரிதவிப்பை தனது கண்களாலே நடித்துக் காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் ப்ரீத்தி அஸ்ரானி.

தெலுங்குத் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு அயோத்தி நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. அதனால், கவினுக்கு ஜோடியாக்கிவிட டான்ஸ் மாஸ்டர் சதீஷ் முடிவெடுத்துவிட்டாராம். இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும், இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X