பார்ட்டியில் ஒரே கலர் உடையில்.. அட்டகாசமாய் கலந்து கொண்ட கவின் அன்ட் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து வழங்கப்பட்ட பார்ட்டியில் கவினும் லாஸ்லியாவும் கலந்துகொண்டனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 106 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 17 போட்டியாளர்களில் மலேசியாவை சேர்ந்த முகென் ராவ் டைட்டில் வின்னர் ஆனார்.
அவருக்கு 50 லட்சம் ரூபாய் பணமும் பிக்பாஸ் ட்ரோபியும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை லாஸ்லியா பெற்றார்.

சக்ஸஸ் பார்ட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும், விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

பாட்டுப்பாடிய முகென்
இதில் லாஸ்லியா, கவின், ரேஷ்மா, மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, முகென், வனிதா, ஷெரின், அபிராமி, என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் முகென் பாட்டுப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒரே நிறத்தில்
லாஸ்லியா சேலையில் அட்டகாசமாய் வந்திருந்தார். கவினும் லாஸ்லியாவும் ஒரே நிறத்தில் உடை உடுத்தியிருந்ததாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரகசியமாக காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்த கவினும் லாஸ்லியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வாயே திறக்காமல் இருந்து வருகிறது. இவர்களின் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது என்றும், இருவரும் ரகசியமாக காதல் உறவில் இருந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வந்தது.
போட்டோக்கள் வைரல்
இந்நிலையில் கவினும் லாஸ்லியாவும் ஒரே நிற உடையில் பார்ட்டியில் கலந்து கொண்டது அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதேநேரத்தில் கவின் லாஸ்லியா பார்ட்டியில் பங்கேற்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வனிதா ஷேரிங்
இந்த போட்டோக்களை வனிதா விஜய குமாரும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் நேற்றிரவு இந்த பார்ட்டி நடைபெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











