மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் கவின் மற்றும் லாஸ்லியா பங்கேற்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss Rio Raj First exclusive video | உங்க அன்புக்கு நன்றி - Filmibeat Tamil

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இவர்களின் காதல் கதை ஊரறிந்தது.

பிக்பாஸ் வீட்டில் சென்றதுமே சாக்ஷியை காதலித்த கவின், பின்னர் லாஸ்லியாவுக்கு தன் மீது காதல் இருப்பதை அறிந்து சாக்ஷியை கழட்டிவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார்.

பெற்றோருக்கு பிடிக்கவில்லை

பெற்றோருக்கு பிடிக்கவில்லை

லாஸ்லியா கவினை காதலித்தது அவரது குடும்பத்தினருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா மற்றும் குடும்பத்தினர் கவினுடனான உறவை துண்டிக்குமாறு கூறினர்.

வாயை திறக்காமல்..

வாயை திறக்காமல்..

ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் கவினுடன் பழகி வந்தார் லாஸ்லியா. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலும் தங்களின் காதல் குறித்து வாயை திறக்காமலும் இருந்து வந்தனர்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

அவர்களின் காதல் ஸ்டேட்டஸ் குறித்து கூறுமாறு இருவரின் ரசிகர்களும் கெஞ்சினர், ஆனால் இருவரின் பக்கத்தில் இருந்தும் எந்த தகவலும் வரவில்லை. இருவரும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாவது என அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தனர்.

பெரும் சோகம்..

பெரும் சோகம்..

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாஸ்லியாவின் தந்தை மரிய நேசன், தான் வேலை பார்த்து வந்த கனடாவில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். அவரது மரணம் ரசிர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கவினுக்கு திருமணம்?

கவினுக்கு திருமணம்?

மரிய நேசன் உயிரிழந்து சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே கவினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் என்றும் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு

சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் சீசன் 4 ஃபினாலே கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கவின், ரம்யா பாண்டியனை வெளியே அழைத்து வந்தார். இதனை தொடர்ந்து ஃபினாலேவுக்கு பிறகு நடைபெற்ற சக்சஸ் பார்ட்டியில் கவினும் லாஸ்லியாவும் பங்கேற்றது தெரியவந்துள்ளது.

பிரபலங்களுடன் போட்டோஸ்

பிரபலங்களுடன் போட்டோஸ்

இருவரும் சக்சஸ் பார்ட்டியில் பங்கேற்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்களுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோக்களும் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி..

ரசிகர்கள் மகிழ்ச்சி..

மேலும் இருவரும் ஜோடியாக சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டார்களா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X