புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு.. மேக்கப் ரூமில் ரெடியாகும் கவின் - மோனிகா.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமான நிலையில், கோலிவுட்டின் யங் ஹீரோவாக தற்போது கலக்கி வருகிறார்.
லாஸ்லியாவுடன் பிரேக்கப் ஆன நிலையில், மோனிகா என்பவரை காதலிக்க ஆரம்பித்த நடிகர் கவின் இன்று அவரை சொகுசு ரெசார்ட் ஒன்றில் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

முதல் ஆளாக நடிகர் விஜய் டிவி புகழ் கவின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்திய நிலையில், அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், கவின் மற்றும் மோனிகா இருவரும் மேக்கப் ரூமில் திருமணத்துக்காக ஒன்றாக ரெடியாகும் வீடியோ ஒன்றும் தீயாக பரவி வருகிறது.
பட்டுச்சட்டை, பட்டுச்சேலை: ஏகப்பட்ட இளம் பெண்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகர் கவின் ஆகஸ்ட் 20ம் தேதி இன்று தனது காதலியான மோனிகாவை தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார். கவின் சந்தனக் கலர் பட்டுச்சட்டையை அணிந்து கொண்டு மணமகன் கோலத்தில் கெத்தாக போஸ் கொடுத்த நிலையில், அவரது காதலியான மோனிகாவும் சந்தன நிற பட்டுப் புடவையில் மணமகளாக அழகு பதுமையாக திருமண மண்டபத்தை அலங்கரித்தார்.
சூப்பர் லொகேஷன்: தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப் திருமணம் செய்துக் கொள்ள தடாகத்தின் நடுவே அழகான திருமண மண்டப செட் போட்டு திருமணம் செய்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டு இருக்கும். அதே போல ஒரு சூப்பரான லொகேஷனில் நடிகர் கவின் மற்றும் மோனிகா திருமணம் நடைபெற்ற நிலையில், அந்த இடத்தின் புகைப்படங்களும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மேக்கப் வீடியோ: கவின் பட்டுச்சட்டை, வேட்டி அணிந்துக் கொண்டு மணமகனுக்குத் தேவையான மேக்கப் போட்டுக் கொண்டிருக்க தனி ரூமில் எல்லாம் இல்லாமல், அதே இடத்தில் மணமகள் மோனிகாவும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றையும் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் வாழ்த்து: நடிகர் கவின் திருமணம் நிறைவடைந்த நிலையில், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கவினையும் மணமகள் மோனிகாவையும் வாழ்த்தி வருகின்றனர். ட்விட்டரில் #Kavin ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











